
தமிழ் சினிமாவில் களவானி திரைப்படம் மூலம் ரசிகர்களிடன் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா. ஆனால், தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதை கோட்டை விட்ட அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
அப்போதுதான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் குடியேறினார். அவருக்கென ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் இதுவரை அவருக்கு ஒட்டு போட்டது போல் யாருக்கும் மக்கள் போடவில்லை. ஆனாலும், அங்கிருக்க விருப்பமில்லாமல் வெளியேறினார்.
அதன்பின் 90 ml என்ற மட்டமான படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், அவர் நடித்த மதயானை கூட்டம் திரைப்படத்தில் இடம் பெற்ற கோண கொண்டக்காரி பாடலுக்கு ரசிகர் ஒருவருடன் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.



