
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரவை ஒருதலையாக காதலித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றவர் ஓவியா. நிகழ்ச்சி முடிந்த பின் இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றினர். ஆனால், காதல் இல்லை நட்பு மட்டுமே எனக்கூறினர்.
சில மாதங்களுக்கு முன்பு ஆரவ் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஓவியா வரவில்லை.
இந்நிலையில், தன்னுடையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓவியா ‘ஆரவ் திருமணம் நடைபெற்ற போது நான் கேரளாவில் இருந்தேன். திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கள் இருக்கும் இடையே என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது.தற்போது அவருக்கு அழகான ஒரு வாழ்க்கை அமைந்துள்ளது. மீண்டும் அதுபற்றி கேட்க வேண்டாம்’ என பதிலளித்துள்ளார்.



