
சமீபத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. இதனால், விஜய் அரசியல் கட்சி துவங்குகிறார் என பரபரப்பு ஏற்பட்டது. அதில் பொதுச்செயாலளராக எஸ்.ஏ.சி பெயரும், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் பெயரும் இருந்தது.
ஆனால், தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம். அதற்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரையே, புகைப்படத்தையே பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இதுபற்று ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ‘நான் விஜய்க்காகவே வாழ்ந்து கொண்டிருகிறேன். அவருக்காக இயக்கத்தை விட்டிவிட்டு பியூன் வேலை கூட பார்த்துள்ளேன். என்னை போல் ஒரு அப்பா அவருக்கு கிடைக்க மாட்டார். அவரை போல மகனும் கிடைக்க மாட்டார்.
விஜய் மக்கள் இயக்கமே நான் துவங்கியதுதான். நான் அரசியல் கட்சி துவங்கியது அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவரின் நன்மைக்காகவே இதை செய்தேன் என ஒரு நாள் புரிந்து கொள்வார். தற்போதுள்ள சின்ன பிரச்சனையை பூதாகரப்படுத்தி பேசுகிறார்கள். நான் விஜயிடன் தினமும் பேசுவதில்லை. எனவே, இதுபற்றி அவரின் பிறகு பேசுவேன்.
அவர் ஒரு விஷ வலையில் சிக்கிக் கொண்டுள்ளார். அதிலிருந்து அவர் வெளியேற வேண்டும். அப்போதுதான் நான் செய்தது சரி என அவருக்கு புரியும் ’ என அவர் அதில் கூறியுள்ளார்.
Source: Vellithirai News



