
செய்தி தொகுப்பாளராக கேரியரை தொடங்கியவர் பிரியா பவானி ஷங்கர். அவரின் தனி தமிழுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து, சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். அவரின் நடிப்பு மக்களிடம் லைக்கை தட்டியது. இதனால் பெரியத்திரையில் பல வாய்ப்புகளை கொண்டார். தற்போது கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இந்நிலையில், தனது காதலருக்கு 10 வருடம் முன்னர் தற்போது என எடுக்கப்பட்டு இருக்கும் இரண்டு புகைப்படங்களை இணைத்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார். அப்பதிவில், உனக்காக எதை சேவ் செய்து வைத்திருக்கிறேன் பார். வாழ்க்கை மாறிவிட்டது. எது மாறவில்லை என்றால் நமக்குள் உள்ள பிணைப்பு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராக்ஸ்டார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.