
ஒரு பெண் தன் கணவருடன் இள வயதில் டேட்டிங் செய்த போது எடுத்த போட்டோவை கணவரது மொபைல் போனில் பார்த்து அது வேறு பெண் என நினைத்து கத்தியால் கணவரை குத்தியுள்ளார்.
மெக்ஸிகோவின் சோனோராவில் வசித்து வருபவர் ஜுவான் என். இவரது மனைவி லியோனோரா என். சில தினங்களுக்கு முன்பு லியோனோரா தன் கணவரின் மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த போது ஒரு பெண்ணுடன் தன் கணவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்துள்ளார்.
இதனால் தன் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக லியோனோராவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த லியோனோரா கூர்மையானஆயுதத்தை எடுத்து தன் கணவர் ஜுவானை குத்தியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் துடித்த ஜுவான் அவரே காவல் நிலையம் போன் செய்து தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். மனைவியை சமாதனம் செய்து அவரிடம் இருந்த ஆயுதத்தை பெற்றனர்.
விசாரணையில் அந்த பெண் கணவரின் போனில் பார்த்தது அந்த பெண்ணும், கணவரும் இள வயதில் டேட்டிங் செல்லும் போது எடுத்த புகைப்படம் என்றும் அவரை கணவர் டிஜிட்டல் செய்து போனில் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதிஷ்டவசமாக அவரது கணவர் காயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார்.