கோலிவுட் திரையுலக ஸ்டிரைக்கில் இருந்தாலும் தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் சமந்தா நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங்கஸ்தாலம்’ என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் டீசர் பட்டையை கிளப்பியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சமந்தா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘மகாநதி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் விஷாலுடன் இரும்புத்திரை, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் மற்றும் கன்னட ரீமேக் படமான யூடர்ன் ஆகிய படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார்



