
நடிகர் விஜய் நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த பிரமாண்டமான திரைப்படம் மெர்சல். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூலாகியதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசிலர் இந்த படம் தோல்வி படம் என்றும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை நஷ்டம் என்றும் பேட்டியளித்து வருகின்றனர்
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் எங்களுக்கு ‘மெர்சல்’ படம் மெகா ஹிட் என்று கூறினர். தற்போது ‘மெர்சல்’ படம் எங்களுக்கு பெருமை என்றும், தளபதி விஜய்யுடன் பணியாற்றியது எங்களுக்கு பெரிய மரியாதை என்று தங்களது டுவிட்டரில் கூறியுள்ளனர்.
ஒரு திரைப்படம் வெற்றியா? தோல்வியா? என்பதை அந்த படத்தின் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் தான் கூற வேண்டும் என்றும், அதைவிடுத்து இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் இந்த படம் நஷ்டம் கொடுத்ததாக பேட்டியளித்து வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
https://twitter.com/ThenandalFilms/status/978596567836868609



