11வது ஐபிஎல் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்ப சென்னை உதயம்தியேட்டர் காம்ப்ளக்ஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், போலீஸ் அனுமதி கிடைத்துவிட்டால், 45 போட்டிகளையும் தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரிய திரையில், ஆடியன்ஸ்கள் மத்தியில் போட்டியை பார்த்தால், நேரடியாக மைதானத்திற்கே சென்று பார்த்த அனுபவம் கிடைக்கும் என்பதால் ரசிகர்கள் இதற்கு பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்