ஜோதிகா கணவராக நடிக்கும் இளம் நடிகர் 

Published:

திருமணத்திற்கு பின்னர் ரிஎண்ட்ரி ஆகி ஜோதிகா நடித்த படங்களான 36 வயதினிலே, மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் இந்தியில் சூப்பர் ஹிட்டான துமாரி சூலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஜோதிகா கணவராக நடிக்க இளம் நடிகர் விதார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்காது என்றும், இருவருக்கும் இடையே டீசண்டான காட்சிகள் மட்டும் உள்ளதாகவும் கூறப்படுகிறது
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் ஸ்டிரைக் முடிந்த பின்னர் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நட்சத்திரம் லட்சுமி மஞ்சு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img