கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று மெர்சல். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகிய பாடல் ‘ஆளப்போறான் தமிழன். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார்
இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய விவேக்கிற்கு கோலிவுட் திரையுலகினர் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருந்த நிலையில் ஒரு இன்ப ஆச்சரியமாக தளபதி விஜய், விவேக்கை தொலைபேசியில் வாழ்த்தினார். இதுகுறித்து விவேக் தனது டுவிட்டரில் ‘விஜய் அவர்களிடம் இருந்து ஒரு ஆச்சரியமான வாழ்த்து இன்று கிடைத்தது. என்ன ஒரு இனிமையானவர் அவர். அவருடைய இனிய வாழ்த்தால் நெகிழ்ந்து போனேன். என்னுடைய இந்த ஆண்டு பிறந்த நாள் உண்மையிலேயே ஒரு ஸ்பெஷல் தான். இவ்வாறு பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்



