நடிகை டாப்சி சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடியபோது சர்ச்சைக்குரிய கேள்வி கேட்ட ஒரு ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த ரசிகர், ‘“நீ சராசரியான பொண்ணுதான். உன்னையெல்லாம் கதாநாயகி ஆக்கியது யார்?” என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த டாப்சி, நான் கொஞ்சமாவது நடிப்பதால் தான் நான் நடிகையாகியுள்ளேன். மேலும் சராசரி பெண் என்றால் கேவலமா? ‘நான் சராசரியான பெண்ணாக இருப்பதில் பிரச்சினை இல்லையே. இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன மாதிரியான சராசரி பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள், சாதிக்கின்றார்கள்;’ என்று கூறியுள்ளார்.
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ஆரம்பம், உள்பட பல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நடிகை டாப்சி தற்போது தட்கா, சூர்மா, முல்க், மன்மரிஷியான் ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.



