இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் இளவரசர் ஹாரியின் திருமணம் மே மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்லது. ஹாரி தன்னுடைய நீண்ட நாள் காதலி மெர்க்கல் என்பவரை அன்றைய தினம் கைப்பிடிக்கவுள்ளார். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து 600 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 600 பேர்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரியின் வருங்கால மனைவி மெர்க்கல், பிரியங்காவின் நெருங்கிய தோழி என்பதும் மூன்று வருடங்களுக்கு முன் தோழிகளான இவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வது குறித்து ப்ரியங்கா சோப்ரா கூறியபோது, மெர்கல் எனது நெருங்கிய தோழி. அவர் திருமண பந்தத்தில் இணையப்போவது மகிழ்ச்சியை அளிக்கிறது. திருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். மணப்பெண்ணின் தோழியாக நான் இருப்பேன் என்ற தகவல் சரியல்ல. அவருடைய ஒரு தோழியாக திருமணத்தில் நான் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்