விக்ரம்-அக்சராஹாசன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்

Published:

vikram akshara - 2026

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல நல்ல தரமான படங்களை வெளிநடிகர்களை வைத்தும் தயாரித்துள்ளது. அந்த வகையில் விக்ரம் நாயகனாகவும், கமல்ஹாசனின் இரண்டாவ்து மகள் அக்சராஹாசன் நாயகியாகவும் நடிக்கவுள்ள படத்தையும் தற்போது தயாரித்து வருகிறது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ள இந்த படத்தில் முதல்முறையாக விக்ரம், அக்சரா ஜோடி சேருவது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

akshara haasan 2 - 2026இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து ஜிப்ரான் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ஒரு நல்ல இசை ரசிகரான ராஜேஷ் எம்.செல்வா படத்திற்கு பாடல்களை கம்போஸ் செய்ய தொடங்கிவிட்டேன். மீண்டும் ஒருமுறை கமல் குழுவினர்களின் படத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுவிபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img