சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்டவர் இர்பான் கான். 1985-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் இர்ஃபான் கான்.
50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ள இர்ஃபான் கான் பான் சிங் தோமர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பாலிவுட்டில் இர்ஃபானின் திறமையைக் கண்டு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது ஹாலிவுட். ஹாலிவுட் மற்றும் இங்கிலாந்த் படங்களில் நடித்தார் இர்பான் கான்.

அமெரிக்கா, இங்கிலாந்த் என வெளிநாட்டு படங்களில் நடிக்க தொடங்கிய இர்ஃபான் கான் முதலில் பிரிட்டிஷ் படமான தி வாரியர் என்ற படத்தில் 2001ஆம் ஆண்டு நடித்தார். அதனை தொடர்ந்து தி நேம் சேக் என்ற ஆங்கில படத்தில் நடித்தார் இர்ஃபான் கான்.
அதனை தொடர்ந்து தி அமேஸிங் ஸ்பைடர் மேன், ஜூராஸிக் வோர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இர்பான், ஸ்லம்டாக் மில்லினியர், ஏ மைட்டி ஹார்ட், இன்ஃபெர்னோ, லைஃப் ஆஃப் பை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பஸ்ல் என்ற ஹாலிவுட் படத்தில் கடைசியாக நடித்தார் இர்ஃபான் கான்.
அவர் நடித்த பெரும்பாலான அமெரிக்க மற்றும் இங்கிலாந்த் படங்கள் முக்கிய அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இர்ஃபான் நடிப்பில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை ஆகிய படங்கள் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை அள்ளின.
லைஃப் ஆஃப் பை படத்தில் தன்னுடைய ரிச்சர்ட் பார்க்கருடன் தனது கடல் பயண பிளாஷ்பேக்கை உணர்ச்சி பொங்க, அனுபவித்து கூறியிருப்பார் இர்ஃபான் கான். இன்னும் சாதிக்க வேண்டியவரை பெருங்குடல் தொற்றால் அதற்குள் கொள்ளை கொண்டுவிட்டான் காலன்.

ஹாலிவுட்டில் குறைந்த படங்களில் நடித்திருந்த போதும் தனக்கான இடத்தை தனித்துவமான நடிப்பால் தக்க வைத்துக்கொண்டார். சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் இர்ஃபான் கானின் திடீர் மரணம் இந்திய சினிமா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சினிமாவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை மறுக்க முடியாது. சினிமா பிரபலபங்கள் தங்கல் இரங்கலை தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் பிரதமர் மோடி இர்ஃபானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இர்ஃபான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு பேரிழப்பு.
Irrfan Khan’s demise is a loss to the world of cinema and theatre. He will be remembered for his versatile performances across different mediums. My thoughts are with his family, friends and admirers. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) April 29, 2020



