ஃபார்ம்யார்ட் சரணவன் வெளியிடும் “மனதில் ஒரு மாற்றம்”        

Published:

cinema பாம்யார்ட் S.சரவணன் வெளியிடும் இப்படத்தை கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால்முத்து தயாரித்திருக்கிறார்.    ‘‘இப்படம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வாலிப பருவத்தில் ஏற்படுகிற இந்தவேதியல் மாற்றம், அவர்களை பொருத்தவரையிலும் அது ஒரு திருவிழா. ஆனால் இந்த திருவிழாஎத்தனை பெற்றோர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பதுசதவிகிதம் நிராகரிக்கப்படுகிறது என்று தான் பதில் வரும். ஆகவே, எல்லோராலும் கொண்டாடப்டுகிற ஒருவிஷயம்தான் திருவிழா. ஒரு சாரருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு சாரருக்கு துக்கத்தையும்கொடுப்பதற்கு பெயர் திருவிழாவே அல்ல. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=HpjA3Z5vPaQ&feature=youtu.be”] இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும் தான், புத்தகங்களிலும்,திரைக்கதையிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால்ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவுசெய்திருக்கிறோம். இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால்படம் முடிந்து வெளியே போகும் போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மனநிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள் என்று நம்புகிறோம். புகையிலை புற்று நோயை உண்டாக்கும், குடி குடியைக் கெடுக்கும், உடல் நலத்திற்கு தீங்கானதுஎன்ற இந்த எச்சரிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல் காதலில் ஏற்படுகிறகொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்’’திரைப்படம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள்நம்புகிறோம். இந்த மனதில் ஒரு மாற்றம் திரைப்படம் இளைஞர்களால் மட்டும் இன்றி பெற்றோர்களாலும்கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.’’என்கிறார் டைரக்டர் ஜனா வெங்கட். இவர் இயக்குநர் சு.பார்த்திபன் அவர்களின் குருகுலத்தில் சினிமா கற்றவர் மற்றும் சாமிஅவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.  இவர் இயக்கிய குறும்படம் “வின்னிங் ஸ்டார்” 2004-ம்ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நடந்த குறும்பட  விழாவில் திரையிடப்பட்டது. அடுத்ததாக 2007-ல் இவர் இயக்கிய “அப்பா என் செல்லம்” குறும்படமும் பாராட்டு பெற்றது.  அதேபோல்இப்போது இயக்கி இருக்கும் “மனதில் ஒரு மாற்றம்” படமும் எல்லோராலும் பாராட்டப்படும் எனநம்புகிறார். இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர். இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வல்லினம் படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்றV.J..சாபு ஜோசப் இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளர் சாய் நந்தா.  மேலும் இவர் மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும்ஹாஜீஅனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றியவர். இசையமைப்பாளராக ஸ்ரீசாஸ்தா.  இவருடைய அப்பா பூபதி அவர்கள் மலையாளத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கலை இயக்குநர் மயில்கிருஷ்ணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் படங்களுக்கு கலைஇயக்குநராக பணியாற்றியவர். பாடல் ஆசிரியர்கள் – அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்கள்எழுதியுள்ளார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img