தற்போது நாடு முழுவதும் கோவிட் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழக அரசும், கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 50 சத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் என்று தெரிவிக்கப் பட்டதால், சினிமா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் .
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்கள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த வலிமை படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. பொங்கலுக்கு வெளியாகும் என்ற நிலையில் வலிமை பட ரிலீஸ் தள்ளிப் போடப் பட்டது ரசிகர்களுக்கு சோகத்தைத் தந்திருக்கிறது.