கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ள படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். உத்தம வில்லன் படம் இம்மாதம் 2ம் தேதி வெளிவரவிருந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 ம் தேதி, படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் மாஸ் படம், விஜய் சேதுபதி, ஆர்யா நடிக்கும் புறம்போக்கு படம் மே 1ம் தேதி ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, இந்து அமைப்பு சார்பில், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ரிலீஸ் தேதி மாறாமல் இருந்த சரிதான்…
உத்தம வில்லன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: மறுபடியும் ரிலீஸ் தேதி மாறுமா?
Popular Categories


