வெள்ள நிவாரணம்: உதவிய சூர்யா, விஷால், தனுஷ்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம்  நிதி  திரட்டி வருகின்றனர்.

இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா.

மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது நன்கொடையாக ரூ 5 லட்சத்தை தலைவர் நாசரிடம் வழங்கினார்.