‘பொறுப்பற்ற’ எம்.பி., திருமா.,வும்! பொறுப்புள்ள பிரஜை காயத்ரியும்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி
thiruma gayathri - 2026

மருத்துவர் ஷாலினி தன் காணொளியில் காயத்ரி ரகுராமை கண்ணியமாக கண்டித்துள்ளார். ஒரு MPயிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரிந்து பேசவேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு சக மனிதரிடம், வேறு ஒரு பாலினத்தை சார்ந்தவரிடம் எப்படி பேசவேண்டும் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு MP என்பவர் கடவுள் இல்லை. நாம் தேர்ந்தெடுத்த நமது பிரதிநிதி. அவர் மதம் சார்ந்து பேசாமல், சாதி சார்ந்து பேசாமல் பொதுவாக இருக்க வேண்டும்.

கீழே இருப்பது அவர் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணம்.

‘நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப்பட்ட திருமாவளன் ஆகிய நான், கடவுள் பெயரால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, உண்மையும், விசுவாசமும் கொண்டு தேசத்தின் ஒருமைப்பாட் டை நிலைநிறுத்தும் விதமாக நடப்பேன் ‘ என்று உறுதி கூறினார்.

எதற்காக ஒரு மதத்தை குறிப்பிட்டு சாடி பேசவேண்டும்? காயத்ரி ரகுராம் பேசியது சரியா என்பது ஒரு பக்கம். திருமாவளவன் பேசியது சரியா? அதற்கு பதில் சொல்லுங்கள். அதற்காக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட MPயை, இப்படி பேசலாமா என்றால் , பேசலாம். அப்படித்தான் பேசவேண்டும். தன் கடமை மறந்த, பதவியை மறந்த, பொறுப்பை மறந்த, அடுத்தவரை காயப்படுத்திய, கை தட்டலுக்காக, ஒரு வீச்சில் பேசிய ஒரு மனிதனை இதை விட அதிகமாக, அசிங்கமாக பேசவேண்டும்.

காயத்ரி ரகுராம் வெறுமனே வாக்களித்த பிரஜை. திருமாவளவன் ஒரு பிரதிநிதி. யாருக்கு பொறுப்பு அதிகம்? பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடக்கவேண்டும். அதற்குத்தான் அந்த பதவியை ‘ பொறுப்பு’ என்கிறோம்.

இப்போது சொல்லுங்கள் திருமாவளவன் செய்தது அதிகம் தவறா, காயத்ரி செய்தது அதிகம் தவறா என்று.

  • ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.