
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கிராமசபை தீர்மானம் இயற்றினால், திறக்கப்படும் கடை உச்சநீதிமன்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், அந்த கிராம சபைத் தீர்மானம் செல்லாது.
கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு டாஸ்மாக் கூடாது என்று ஒருமித்துச் சொல்லும்போது அதை விட உச்சநீதிமன்றத்தின் வரைமுறைகள் மேலானவை என்பது எந்த நியாயத்தில் சேர்த்தி என்பது எனக்குப் புரியவில்லை. கிராம சபை, பஞ்சாயத்து ராஜ்யம், மக்கள் அதிகாரம் என்பதெல்லாம் பொருள் இல்லாப் பிதற்றல்கள்தாமா?
வாதத்துக்கு இப்படிச் சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருப்பதாகச் எடுத்துக்கொள்ளலாம்..” நாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள். மக்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லப்படவில்லை. தவறான வழிகாட்டுதல்கள். எதிர்க்கிறார்கள். எனினும் நடைமுறைப்படுத்தவேண்டியதுதான். அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவோம்.” இந்தக் கருத்து சர்ச்சைக்குட்பட்டதுதான். என்றாலும் ஒரு வாதத்துக்காகவே எடுத்துச் சொல்லுகிறேன். ஆனால் டாஸ்மாக் என்பது வளர்ச்சி சம்பந்தப்பட்டதல்லவே? அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதாயிற்றே?
உச்ச நீதி மன்றம் demonetization சமயத்தில் நாட்டில் riot situation வந்துவிடக்கூடாது என்று கவலை தெரிவித்தது. இப்போது கிராமங்களில் Roit situation உருவாகி வருவதை தொலைக்காட்சியில் எப்போதாவது ஒரு முறையாவது பார்த்திருக்க மாட்டார்களோ?
Courts’ ways, like God’s ways, are inscrutable.!
கருத்து: வேங்கடரமணி



