October 13, 2024, 1:53 PM
32.1 C
Chennai

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தேர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடி
யேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சோழவந்தான் பெரிய கடை வீதியில் தொடங்கிய, தேர் பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி சின்ன கடை வீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் வழியாக மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும் .

காலை 8:30 மணிக்கு தொடங்கும் தேரோட்ட நிகழ்ச்சியானது 11:30 மணி அளவில் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்வது வழக்கம் ஆனால், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டை மறித்து கடைகளை கட்டி இருப்பதாலும் சாலையின் நடுவில் கடைகள் இருப்பதாலும் தேர் வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக, சின்ன கடை வீதி எனும் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் நுழைந்த தேர் 20 நிமிடத்தில் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டிய நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது . குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் இருந்து தேரை இழுப்பதற்கு பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு இடத்தில் இருந்து தேரை நகற்றுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலானதால், தேரோட்ட நிகழ்ச்சியை காண வந்த வெளியூர் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

ALSO READ:  அந்த விஷயத்தில் நாங்க பிஎச்டி., திருமாவளவன் எல்கேஜி.,: அன்புமணி பளிச்!

பல இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து தேர் இப்போது வரும் அப்போது வரும் என ,எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக எடுத்து தேர் வருவதற்கு வழி ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாததால் 3 மணி நேரத்தில் நிலைக்கு வர வேண்டிய தேர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தேர் நிலைக்கு வராததால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா.

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா. செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு...