காங்கிரஸும், உச்ச நீதி மன்றமும் – என்ற தலைப்பில், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் தகவல் இது…
இப்போது, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கபில் சிபல், பிரஷாந்த் பூஷன். இந்திரா ஜெசிங், அபிஷேக் மனு சிங்வி, போன்ற உச்ச நீதி மன்ற வக்கீல்கள், பல ஆண்டுகளாக, தங்கள் வசம் உள்ள வழக்குகளை, தங்களுக்கு சாதகமான “பெஞ்ச்” களில் போட்டுக் கொண்டு, நீதிபதிகளின் தயவில், கோடி கோடியாக சம்பாதித்து வந்தனர்.
இப்போதுள்ள நேர்மையான தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா விடம் இவர்கள் “பாச்சா” பலிக்கவில்லை. அவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி, எந்த வழக்கு எந்த பெஞ்சால் விசாரிக்கப் பட வேண்டும் என்பதை அவரே நிர்ணயிக்கிறார். இதனால், இந்த நாதாரிகளின் செக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இதனால் தான், இவர்கள் இப்போது, குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு, சில எம் பிக்களின் உதவியுடன் தீபக் மிஸ்ரா மீது “இம்பீச்மென்ட்” நடவடிக்கை எடுக்க, பாராளுமன்ற ராஜ்ய சபை சேர்மனாகிய, உதவி ஜனாதிபதி, வெங்கைய நாயுடு விடம் , மனு கொடுத்தனர்.
அதில், இந்த சோப்ளாங்கிகள், தீபக் மிஸ்ராவைப் பற்றி எந்த அவதூறையும் சொல்ல முடியவில்லை. எனவே, வெங்கைய நாயுடு, இவர்கள் மனுவை “ஆய்”” துடைக்க அனுப்பி விட்டார. இதனை எதிர்த்து அப்பீலும் செய்ய முடியாது. பாவம் காங்கிரஸ்.
இப்போது நீதிமன்ற நேர்மை பற்ரி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ், தங்கள் ஆட்சியில், நீதிமன்றத்தை எப்படி நடத்தி வந்திருக்கிறது தெரியுமா?
1. 1973-ல், இந்திரா காந்தி, பிரதமராக இருக்கும் போது, உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான, ஷெலாட், ஹெக்டே, குரோவர் என்னும் 3 நீதிபதிகளைப் புறம் தள்ளி விட்டு, ஏ என் ரே என்பவரை தலைமை நீதிபதியாக நியமித்தார். அதனால், அந்த 3 நீதிபதிகளும் ராஜிநாமா செய்தனர். அப்போது பார்லிமென்ட்டில், இந்திரா, ஆட்சிக்கு சாதகமான தலைமை நீதிபதியை நியமிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று பேசினார். அப்போது எங்கே போனது காங்கிரஸின் “நீதிமன்ற நேர்மையைக் காப்பது”?
2. 1975-ல், ராஜ்நாராயண் என்பவர், இந்தரா காந்தியின் தேர்தல் பற்றி ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில், ஜே என் சின்ஹா என்னும் நீதிபதி முன்பு போட்ட போது, காங்கிரஸார், அந்த நீதிபதியை, , தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கா விட்டால், அவர் மனைவிக்கு ஆபத்து ஏற்படும்” என்று மிரட்டினர். நேர்மையான அந்த நீதிபதி, “ என் மனைவி 2 மாதம் முன்பே, இறந்து விட்டார்” என்று சொல்லி, இந்திராவுக்கு எதிடாக தீர்ப்பளித்தார். அதனால் தான் நம் நாடில் அவசரநிலையை இந்திரா பிரகடனம் செய்தார். அப்போது எங்கே போனது காங்கிரஸாரின் “நீதி மன்ற நேர்மையைக் காப்பது”
3. 1976-ல், ஒரு வழக்கில், காங்கிரஸுக்கு சாதகமாக , ஏ என் ரே, எம் ஆர் பெக், சந்திரசூட், பகவதி,என்னும் ஜட்ஜ்கள் தீர்ப்பளிக்க, கன்னா என்னும் ஜட்ஜ் மட்டும் எதிர்த்துத் தீர்பபளித்தார். அதற்கு அவருக்குக் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மற்ற ஜட்ஜ்கள் தலைமை நீதிபதியாக கன்னாவுக்கு மட்டும், தலைமை நீதிபதிப் பதவி இந்திராவால் தரப் படவே இல்லை. எம் ஆர் பெக் குக்கு ராஜீவ் காந்தி காலத்தில் பத்ம விபூஷன் பட்டம் வேறு கொடுக்கப் பட்டது. இது தான் காங்கிரஸ், “நீதிமன்ற நேர்மையைக் காத்தது”.
4. இதில், காங்கிரஸுக்கு சாதகமான, எம் ஆர் பெக் என்னும் நீதிபதி பணி நிறைவு செய்ததும், 1980-ல், மைனாரிடி கமிஷன் தலைவராக நியமிக்கப் பட்டார். பின்னால், காங்கிரஸின் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் டைரக்டர் ஆனார்.
5. பாஹுல் இஸ்லாம் என்பவர் காங்கிரஸ் எம் பி யாக இருந்தவர். பின் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நீதிபதியானார். கௌஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், 1980-ல் ரிடையர் ஆனார். இந்திரா காந்தி, இவரை, ரிடையர் ஆகி 9 மாதம் கழித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆக்கினார். பின் இவர் அஸ்ஸாமில் உள்ள பர்பேட்டா தொகுதியில் எம் பி தேர்தலில் காங்கிரஸ் டிக்கெட்டில் நின்றார். இது ஒரு பெரியக் கூத்து.
6. இந்திரா காலத்தில் இருந்து, தங்களுக்கு சாதகமாக, வழக்குகளை தங்களுக்கு வேண்டிய ஜட்ஜ்களின் பெஞ்ச்களுக்கு மாற்றிக் கொள்ளும் கெட்ட வழக்கம் வந்து விட்டது. இதனால், கபில் சிபல் போன்ற வக்கீல்களுக்கும் பிழைப்பு மிக நன்றாக நடக்கத் தொடங்கியது.அவர்கள் வாயில் இப்போதுள்ள தலைமை நீதிபதி மண்னை அள்ளிப் போட்டு விட்டார். அது தான் இவர்களுக்குக் கோபம்.
7. ஜஸ்டிஸ் ராமசாமி என்பவர் மீது, 14 குற்றங்கள் சுமத்தப் பட்டன. அவற்ரில் 11 க்கு ஆதாரங்கள் வலுவாக இருந்தும், காங்கிரஸ் அவருக்கு சாதகமாக நின்று இம்பீச்மென்ட் வராமல் பார்த்துக் கொண்டு, தன் நீதிமன்ற நேர்மையை உலகுக்குக் காட்டியது.
இதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிய வைத்தால் தான் மதவாத, கேவல, கொள்ளைக்கார அரசியலை நடத்தி வரும் காங்கிரஸின் முகத் திரை கிழியும்.




