கடனுக்கு உத்தரவாதம் கொடுத்த விவகாரத்தில் 12 வாரங்களுக்குள் செலுத்திவிடுகிறோம் என்று சொன்னார்கள்..
சொன்னபடி நடக்கவில்லையே ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. அதற்கு, முன்பு வாதாடிய வழக்கறிஞர் பார்ட்டியிடம் சம்மதம் பெறாமல் அவராகவே வாக்குறுதி தந்துவிட்டார் என்று பதில் வருகிறது..
எவ்வளவு மிதப்பு இருந்தால் இப்படியொரு பதில் வரும் என்று, உச்சநீதிமன்றம் ஆவேசமாகி, கோர்ட்ோடு விளையாடாதீர்கள் என்று எச்சரிக்கிறது..
எச்சரிக்கையை பெறுபவர் லதா என்ற பெண்மணி. அவரின் கணவர் என்ற ஒரே காரணத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை நாம் இங்கே கொண்டு கோர்ப்பது நல்லதல்ல..
சிஸ்டம் சரியில்லாதது- ஒரு பாவச்செயல்,
சிஸ்டம் சரியில்லாதது- ஒரு பெருங்குற்றம்,
சிஸ்டம் சரியில்லாதது- மனித நேயமற்றது.
- கருத்து: ஏழுமலை வேங்கடேசன்




