பா.ஜ.க தேசியச் செயலாளர் H. ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான நீதியரசர்கள் திரு .ஹூலுவாடி ரமேஷ் மற்றும் திரு. கல்யாணசுந்தரம் ஆகியோரை இத்தாலிய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் அணுகினர் !
இதற்கு சட்டத்தில் எங்கு இடம் இருக்கிறது என்று கேட்டு நீதிபதிகள் இத்தாலிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்களின் கோரிக்கையை நிராகரித்தனர் !
இந்த நிராகரிப்பிற்குப்பின், ஏழாம் டிவிஷன் பெஞ்ச் முன் காங்கிரஸார் வழக்கைக் கொண்டு சென்றனர்! இந்த அமர்வில் நீதியரசர்கள் செல்வம் மற்றும் நிர்மல்குமார் நிதிபதிகளாக இருக்கின்றனர்!
இரண்டாம் டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்த வழக்கை ஏழாம் டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக் கொண்டது !
நீதிபதி திரு.செல்வம் அவர்கள் திரு. H. ராஜா அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பிற்கான நோட்டீஸூக்கு உத்தரவிட்டார்! அதுவும் தாமகவே முன்வந்து நோட்டீஸ் விடுப்பதாக, காங்கிரஸ் வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று நோட்டீஸ் விடுத்துள்ளார்!
காங்கிரஸாரின் கோரிக்கைக்குப் பின் ‘தாமாகவே முன்வந்து ‘ என்று உத்தரவு பிறப்பிப்பது சட்டத்தின் அடிப்படையிலும் பொது நியாயத்தின் அடிப்படையிலும் தவறு!
ஒரே நீதிமன்றத்தில் படிநிலையில் மேலே உள்ள இரண்டாம் நீதிமன்ற அமர்வின் முடிவை கீழே உள்ள ஏழாம் அமர்வு தள்ளுபடி செய்தது சட்டப்படி தவறு !
இந்தத் தவறான உத்தரவை நீதிபதி செல்வம் அவர்கள் பிறப்பித்த காரணம் என்னவோ! இதை நீதிமன்றம் விசாரிக்குமா ?




