
வழக்கமாக இடதுசாரிகள் தான் போராட்டங்கள் ஹர்த்தால் என்று ஏதாவது செய்து மக்களின் கவனத்தை ஈரத்துக்கொண்டே இருப்பார்கள். கேட்டால் போராடாமல் வெற்றி கிடையாது
என்பார்கள். கேரளாவில் இந்துத்வா அமைப்பு களும் இடதுசாரிகளின் வழியில் போராடி இடதுசாரி களை தோற்கடிக்க முனைகிறார்கள் என்பதை கேரளாவில் சமீப காலமாக இந்துத்வா அமைப்புகள் அறிவிக்கும் மாநிலம் தழுவிய பந்த்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆச்சரியம் என்னவென்றால் இந்துத்வா அமைப்புகள் அறிவிக்கும் பந்த்கள் இடதுசாரி அரசியல் வேரூன்றி இருக்கும் கேரளாவில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் கேரளா முழுவதும் இந்துத்வா அமைப்புகள் வேரூன்றி விட்டதை அறிந்து கொள்ளலாம்.
கேரளாவில் இன்றும் இந்துத்வா அமைப்புகள் முழு நேர கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.எதற்கு தெரியுமா?
கேரளாவில் இந்து ஐக்கிய வேதி என்கிற இந்துக்களை ஒருங்கிணைக்கும் இயக்கத்தின் தலைவரான சசிகலா டீச்சரை ஐயப்பன் கோயிலு க்குள் நுழைய விடாமல் கைது செய்துள்ளது
கேரளா காவல் துறை.
என்னப்பா ஒரு பெண்ணை கைது செய்ததற்கு மாநிலம் முழுவதும் கடை அடைப்பா? என்று நீங்கள் கேட்கலாம்.. இந்த இந்து ஐக்கிய வேதி என்கிற அமைப்பு கிட்டதட்ட நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள இந்து முன்னணி மாதிரி என்று வைத்து க்கொள்ளுங்கள் இப்பொழுது மிசோரம் மாநில கவர்னராக இருக்கும் குமணம் ராஜ சேகரனால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக சசிகலா டீச்சர் இருக்கிறார்
பாலக்காடு வல்லபுலா அரசு பள்ளியில் 30 வருசத்துக்கும் மேலாக டீச்சராக பணியாற்றி ஆசிரியராக இருக்கும் பொழுதே மாணவர் களுக்கு மத உணர்வு களை தூண்டுகிறார் என்று கேரள மாநிலம் முழுவதும் பரவிய சசிகலா டீச்சர் புகழி னால் ஆர்வம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு அவரை இந்து ஐக்கிய வேதி இயக்கத்தில் ஐக்கியமாக்கியது்.
சசிகலா டீச்சர் தான் இப்பொழுது கேரளாவில் இந்துத்வாவின் பிரச்சார பீரங்கி. கண்டிப்பாக வரும் தேர்தலில் பாலக்காடு ஏரியாவில் தேர்தல் களம் காண்பார்.
இவரை கைது செய்ததால் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இன்று கேரளாவில் முழு நேர கடை அடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் கடையடைக்கப்பட்டு எங்கும் வெறிச்சோடி இருக்கிறது .. ஆக போராடாமல் வெற்றி கிடைக்காது என்று பாடம் சொல்லிக் கொடுத்த இடதுசாரிகள் ஆளும்
கேரளாவில் ..ஆம் போராடாமல் எதுவும் கிடைக்காது என்று இந்துத்வா இயக்கங்கள் எதிர் பாடம் கற்பித்து கொண்டு இருக்கிறார்கள்..
- கருத்து: விஜயகுமார் அருணகிரி



