
கோவை கோனியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை பார்க்க நேர்ந்தது.
கோவிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை. மீறித் திருமணம் செய்தால் மணமக்கள், துணை நிற்போர் மேல் நடவடிக்கை
எடுக்கப் படும்.!
இந்துசமயத்தையும், அதன் வழிநடப்பவரையும், கோவிலுக்கு வரவிடாமல் தடுக்க அறநிலையத்துறை இதைவிட நல்ல காரியம் செய்ய முடியாது!

கோவிலில் திருமணங்கள் யாரெல்லாம் செய்வார்கள்? ஏழை, எளியவர்கள், திருமண மண்டபச் செலவு செய்ய இயலாதவர்கள், பணமிருந்தாலும் வேண்டுதல் நேர்ந்து கொண்டவர்கள், இப்படியானவர்கள் மாத்திரமே, கோவில் திருமணங்களை விரும்புகிறார்கள்.!! இவர்களெல்லாம், வேற்று மதத்தவரோ, பயங்கரவாதிகளோ அல்லர்.!
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கோவிலில் திருமணத்தை நடத்த மாட்டார்கள்.! கோவிலில் திருமணம் செய்தால் செலவு சுருக்கம், நேரமும் மீதமாகும் .! மேலும் இறைவன் சாட்சியாக நடக்கும் திருமணமென்பதால், மணவாழ்வு உறுதிப்படும் என்கிற நம்பிக்கையும் நமது மக்களுக்கு இருக்கிறது!!
இந்து மக்களின் நன்கொடையாலும், ஆதரவாலும் கட்டப்பட்ட இக்கோவிலில், இறை நம்பிக்கை உள்ளோர் திருமணம் செய்யக் கூடாது என விளம்பரத்தட்டி வைக்க, இக்கோவில் வருமானத்தில் பிழைப்பு நடத்துகிற அறநிலையத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது.!??
கோவிலில் கூட்ட நெருக்கடி, பாதுகாப்புக் குறைவு, மாசுக்கட்டுப்பாடு என இவர்கள் ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.!! ஒரு திருமணம் அதிகப்பட்சம் ஒண்ணரை மணி நேரத்தில் முடிகிற நிகழ்வுதானே.!??
பழனி திரு ஆவினன் குடி முகூர்த்தநாளில் சுமார் நூறுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.!!
அவ்வளவு ஏன் கோவை ஈச்சனாரி கோவிலில், பேரூர் கோவிலில், பா.நா.பாளையம் பெருமாள் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி உள்ளதே.!! கோவில் பாதுகாப்பு, சுகாதாரம் காக்க, திருமணம் செய்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதுதானே.? இது கோவில் நிர்வாகத்தின் கடமைதானே.?
இதை ஏதோ சட்டவிரோதமான செயலெனத் தடை செய்திருப்பது நியாயமற்ற செயல்!
- பி.ராம்ராஜ் பழனி



