மன்னிப்பு… எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை…!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
vijayakanth punch - 2026

ரொம்ப காலத்துக்கு முன்னால, குஸ்தி கத்துகிட்டிருந்தப்ப ஒரு நாள் எனது குஸ்தி வாத்யார் ரோட்ல ஒருத்தன அடிச்சிட்டிருந்தார். போன வேகத்துல அவர தடுக்க முயன்றேன்; என்னய புடிச்சி அப்படியே ஒரு பத்தடி தள்ளி தூக்கி வீசிட்டார்.

அன்று இரவு குஸ்தி பயிற்சியின்போது அவர் நாலு மிதி மிதிச்சி சொன்ன பாடம்: ரோட்லயோ, வேறெங்கயோ, நம்பாளு சண்ட போடறான்னா, சண்டைய தடுக்கணும், அல்லது நம்பாள காப்பாத்தணுமின்னா, எதிராளியத்தான் தேக்கி நிறுத்தணும். ஏன்னா, நீ நம்பாள தேக்கி, தடுக்கமுயலும் ஒரு செகண்டுல, எதிராளி ஆயுதமேந்தியவனாயிருந்தா, நம்பாள குத்திடுவான், அல்லது வெட்டிடுவான்.

அப்ப, நீ எதிராளிக்குத் தான் உதவி செய்ததாகும். அதனால தான் உன்னய பக்கத்துல விடாம, தூக்கி வீசினேன். இந்தப் பாடத்த சாகுற வரைக்கும் மறக்காதேன்னாரு.

அதே போல, நண்பனாயிருந்தாலும், சண்டையின் போது உன்னை தடுக்க வருபவனிடம் தான் எதிராளியை விட மிக ஜாக்கிரதையாயிருக்கணும்ன்னாரு.

இந்தக் கதை சொல்லும் நீதி:
படம் வரஞ்சி அவமானப்படுத்துறவன நம்பலாம், தெரியாம நடந்திடுச்சி மன்னிச்சிக்கோங்கறவன கூட நம்பலாம், ஆனா, அதான் மன்னிப்பு கேட்டாச்சுல்ல, விஷயத்த இதோட மறந்துடுங்கங்கறவன மட்டும் என்னைக்கும் மன்னிக்கவும் கூடாது, மறக்கவும் கூடாது.

ALSO READ:  சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பாடம் எடுத்த பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்!
மு.ராம்குமார் / Mu Ramkumar

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.