கட்டதுரை… பகடையை உருட்டுறார்… தாயம் விழுமா? விழுந்து காயம் படுமா?

உரத்த சிந்தனை
thambidurai - 2026

தம்பிதுரை தன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார். தேர்தல் நேரத்தில் குட்டையைக் குழப்பி பேரம் பேச நேரம் பார்த்துவிட்டார்.

அதிமுகவில் அடுத்து நடக்க இருக்கும் சாத்தியக் கூறுகள்…
1, தம்பிதுரைக்கு அடுத்த எம்.பி சீட் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கலாம்.
2, தம்பிதுரை கட்சிக்குள் கலகத்தை உண்டு பண்ணி, சிலரையாவது பிரித்து தினகரனுடன் சேரலாம்.
3, திமுகவிலிருந்து ஒரு நல்ல தொகைக்கு தம்பிதுரையை விலைக்கு வாங்கி முடக்கி வைக்கலாம்.

ஆனால், ஈபிஎஸ்/ஓபிஎஸ் டீம் நாம நினைக்கிற மாதிரி சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. எல்லாரும் அமாவாசை சத்யராஜ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வில்லாதி வில்லன் படத்தில் வரும் பூனைக்கண் சத்யராஜ் கேரக்டர் ஆசாமிகள். அவர்களுக்கு காரியம் தான் முக்கியம்.

தம்பித்துரைக்கு ஒரு எம்.பி சீட் கொடுத்து அதில் மெனெக்கெட்டு அவரைத் தோற்கடித்து முடக்கி வைக்கும் அளவுக்கு டைம் எடுக்க மாட்டார்கள். இவ்வளவு நேரத்தில் தம்பிதுரையின் பலவீனங்கள் பக்கம் படையெடுப்பு நடத்தியிருப்பார்கள்.

முதல்வராகத் தன்னை நியமிக்க டெல்லியில் முயன்று முடியாததால், கடுப்பிலிருந்த தம்பிதுரையை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டே தான் இருந்திருப்பார்கள் இரட்டையர்கள்.

சமயம் பார்த்து மிடாஸ்-ல் (MIDAS) அடித்து ஆனானப்பட்ட சசிகலா குடும்பத்தையே வலுவிழக்கச் செய்தவர்கள். தம்பிதுரையெல்லாம் எம்மாத்திரம்?

  • ஆனந்தன் அமிர்தன்

1 thought on “கட்டதுரை… பகடையை உருட்டுறார்… தாயம் விழுமா? விழுந்து காயம் படுமா?”

  1. இந்த முறை இவர் கரூர் பாராளுமன்ற தொகுதியில் நின்று ஜெயிப்பது சிரமம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.