December 5, 2025, 12:52 AM
24.5 C
Chennai

மே 23..?! காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக.,?!

stalin thari - 2025

மே 23ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் என்று உங்களுக்கு யார் சொன்னது என்று பதில் கேள்வி கேட்டு செய்தியாளர்களையே
அலறவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழகத்தில் திமுக., கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக்
கணிப்புகள் தெரிவித்துள்ளதால் அதுகுறித்து கருத்து கேட்க, திமுக, தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்றனர் செய்தியாளர்கள். சென்னை
கோபாலபுரத்தில் கருணாநிதி வாழ்ந்த இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், மே 23ஆம் தேதி தில்லியில் நடைபெறும்
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்குபெறுமா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், மே 23ஆம் தேதி தில்லியில் கூட்டம் என யார் சொன்னது என
எதிர்க்கேள்வி எழுப்பினார்.

அவரது எதிர்க்கேள்வியால் மயக்கமடையாத குறையாய செய்தியாளர்கள் அங்கிருந்து வெளிவந்தனர். காரணம், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மே 23ம்
தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு கலந்து கொள்ள வருமாறு தங்களுக்கு காங்கிரஸ் தலைமையிடம் இருந்து கடிதம் வந்திருப்பதாகக் கூறியது
திமுக.,தான்!

அதுமட்டுமல்ல… காங்கிரஸின் இந்த நடவடிக்கையை ஆதரித்து, எதிர்க்கட்சிகள் ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று அறிக்கை விட்டது
திமுக.,வின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி
அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா
காந்தி, பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளுடன் இது தொடர்பாக ரகசியப் பேச்சு நடத்தி வருகிறார் என்று இரு தினங்களுக்கு முன் பரபரப்பாக பேச்சு
அடிப்பட்டது.

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் 23-ஆம் தேதி அன்றே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தில்லியில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாகவும்
ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், அக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதை அக்கட்சி வியாழக்கிழமை உறுதி
செய்தது. இதன் மூலம் மே 23-இல் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த இருப்பது உறுதியானது.

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் காங்கிரஸ்
கட்சியின் முக்கிய நோக்கம் என்றும், எனவேதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு
செய்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப பிராந்தியக் கட்சிகளுடன் அனுசரித்துச் செல்லகாங்கிரஸ் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப் பட்டது.

பாஜக, காங்கிரஸ் இரு அணிகளுக்கும் பிடிகொடுக்காமல் இருக்கும் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்  ஆகியோரையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது.

காங்கிரஸின் இந்தக் கூட்டத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்பதும் உறுதியானது.

ஆனால் நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், காங்கிரஸின் கொஞ்சம் நஞ்சமுள்ள ஆசையையும் தகர்த்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் விழி பிதுங்கி நிற்க, அதற்கு ஏற்றார்ப் போல், காங்கிரஸ் அப்ப்டி ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறது என்று உங்களுக்கு யார் சொன்னது என்று பதில் கேள்வி கேட்டு செய்தியாளர்களைக் கலங்கடித்துள்ளார் ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல, மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக., அங்கம் வகிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்றோ ஆம் என்றோ உறுதியாகச் சொல்லாமல், அதை மே 23 அன்று பார்க்கலாம் என்று ஸ்டாலின் மழுப்பியதும், அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திமுக., காங்கிரஸுடன் மட்டுமல்ல, சந்திரசேகர் ராவ், நாயுடுவுடன் மட்டுமல்ல, பாஜக.,வுடனும் பேசி வருகிறது என்று கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். அது உண்மையாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக கருத்துகள் உலா வருகின்றன.

எனவே காங்கிரஸில் இருந்து கழன்று கொள்ள அல்லது கழற்றிவிடத் தயாராகி விட்டதாகவே அவரது எதிர்க்கேள்வி அமைந்திருந்ததாக செய்தியாளர்கள் முணுமுணுத்தனர்.

1 COMMENT

  1. தி.மு.க.வின் பொய் நாடகம் அரங்கேற்றம் குறித்து, நான் முன்பே இந்த மாதம் பதினான்காம் நாள் அன்று TIMELINE ல் பதிவிட்டேன், இப்போதும் கூறுகிறேன், தி.மு.க. பதவிக்காக எதை வேண்டுமானாலும் seiyum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories