வன்முறைகளின் உச்சம்! அராஜகம் அடிதடி மண்டை உடைப்பு! அழுதுகொண்டே வீடு திரும்பிய மே.வங்க பாஜக., பெண் வேட்பாளர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Barathi kosh west bengal - 2026

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளர் பாரதி கோஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவர் அழுது கொண்டே வீடு திரும்பியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கட்டல் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக பாரதி கோஷ் போட்டியிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை இன்று காலை அவர் வாக்குச் சாவடி ஒன்றுக்குச் சென்றபோது திரிணாமுல் காங்கிரஸின் பெண் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரை எதிர்த்து மிரட்டியுள்ள்னர். தொடர்ந்து பாரதி கோஷையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார்.

பாரதி கோஷ் அழுகையுடன் வீடு திரும்பும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, ஒரு காலத்தில் நம்பிக்கைக்கு உரியவராக பாரதி கோஷ் செயல்பட்டவர்தான்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பா.ஜ.க ஆதரவாளர்கள் இருவர் காயமடைந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நேற்று இரவு கிழக்கு மிட்னாப்பூர் அருகே பகாபன்புர் பகுதியில் இருவர் சுடப் பட்டுக் கிடந்துள்ளனர். போலீஸார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் அனந்த குச்சைட் மற்றும் ரஞ்சித் மைத்தி என்பது தெரியவந்தது.

நாடாளுமன்ற மக்களவைக்கான 6ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இது போன்ற வன்முறைகள் மேற்கு வங்கத்தில் மம்தாவின் காட்டாட்சி குண்டர்படைகள் வலுவுடன் சுற்றுவதையே காட்டுவதாகக் கூறப் படுகிறது.

1 thought on “வன்முறைகளின் உச்சம்! அராஜகம் அடிதடி மண்டை உடைப்பு! அழுதுகொண்டே வீடு திரும்பிய மே.வங்க பாஜக., பெண் வேட்பாளர்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.