
திருச்சி:
எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று அந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக ஒருவரை தங்கள் மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கேட்கும் அளவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்றுள்ளது, திரிபுராவின் பாதிப்பு என்று கருத்து தெரிவிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை ராசேந்திரன் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள, இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில், எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று போட்ட தீர்மானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எச். ராஜா வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவதால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகக் கூறினாலும், ஒருவரை ஒரு இடத்துக்குள் வரகூடாது, அல்லது வருவதை தடை செய்ய வேண்டும் என்று கோரும் அளவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிபுரா தேர்தல் முடிவுகளையும் நிகழ்வுகளையும் கண்டு அரண்டு போயிருப்பதாகவே கருதப் படுகிறது.
எச். ராஜா பேசும் கூட்டங்களுக்கு புதுக்கோட்டையில் அனுமதி அளிக்க கூடாது என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அம்மாவட்ட காவல் நிலையத்தில் மனு கொடுக்கவுள்ளார்களாம்!




ஜனநாயக நாடà¯à®Ÿà®¿à®²à¯ ஒவà¯à®µà¯Šà®°à¯ கà¯à®Ÿà®¿à®®à®•னà¯à®•à¯à®•à¯à®®à¯ அவரவர௠கரà¯à®¤à¯à®¤à¯ˆ சொலà¯à®² உரிமை உளà¯à®³à®¤à¯.பயணம௠செலà¯à®² உரிமை உளà¯à®³à®¤à¯.