November 30, 2021, 2:34 am
More

  தல மோடிக்கு… மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..!

  modi saifi mosque - 1

  தல மோடிக்கு, ஸலாம் வெச்சுக்கறேன் வாத்யாரே. எனுக்கு நானே ஒரு இன்றோடக்சன் தந்துக்கறேன்பா. நான் ஜாம்பஜார் ஜக்குவோட சிஷ்ய புள்ள மயிலாப்பூர் மக்கு.

  உன்னிய நினைச்சா எனக்கு பாவமா கீது வாத்யாரே. உனுக்கு அர்சியலும் தெர்ல ஜனங்க மன்சுல இன்னா கீதுன்னும் தெர்ல..

  நல்ல மருமவன்னு பக்கத்து ஊட்டு பஞ்சவர்ணமும் அடுத்த தெரு அங்கம்மாவும் சொன்னா இன்னா பிரயோஜனம், சொந்த மாமியார் சரோஜா சொன்னாத்தானே கெத்து.. அது கணக்கா உனுக்கு வெள்ளைக்காரனும் சப்பான்காரனும் நல்லா வேல செய்யறேன்னு இஷ்டாம்ப் அடிச்சு சொன்னா ஆருக்கு பிரயோஜனம் சொல்லு. .நம்ம மன்ஷாள் நீ சுகுர்ரா வேலை செய்யறேன்னு சொன்னாத்தானே டாப்பு..

  ஒத்த மாமியாரை சமாளிக்கறதுக்குள்ளே டங்கு வார் அறுந்துடும். உனுக்கு ஊருக்குள்ள குந்தினுகிற மொள்ளமாரி, முடிச்சவுக்கி பிராடு வியாபாரிலேர்ந்து, மத மாத்த கும்பல், கம்மூனிஸ்டு.. கூட்டணி கட்சி, எதிர் கட்சின்னு அத்தினி பேரும் மாமியாதான்..அவ்ளோ ஏன், நீ யாரையும் துன்ன உடறதில்லேன்னு உன் கட்சி ஆளுங்களும் மாமியார் ஆயிட்டானுங்கோ..இத்தினி பேரை சமாளிக்கிறது பேஜார்தான் நைனா..

  நான் ஒரு ரோசனை சொல்றேன்.. மாமியாக்காரி கைல நல்ல பேர் வாங்கணும்னா அவ போற போக்குலேயே போய்தான் மடக்கணும்..கைல வாங்கிக்கினியா? ..அவளுக்கு வறுத்த கறியும், செட் தோசையும் புடிக்கும்னு தெரிஞ்சா, நீ ரெண்டு நாளைக்கு அவளுக்கு புடிச்சது பண்ணி போடு.. அப்பால உனுக்கு புடிச்ச முட்ட போண்டாவை பண்ணி..அத்தே, உங்களுக்காக நா பெசலா பண்ணேன்னு சொல்லி குடு.. அக்கம் பக்கம் அல்லார் கிட்டேயும், என் மாமியா மாதிரி வருமா..அப்படின்னு இப்படின்னு பிட்டை போடணும்.. அப்பால பாரு, உன்ன தாங்கு தாங்குனு தாங்குவா..

  அதா மாறி நீ இன்னா பண்றே..மொதல்ல ஜனங்களுக்கு அவங்க ரூட்லே போய் பெப்பர்மிண்ட்டு குடு.. ஏதோ இன்கம்டேக்ஸ்சாமே மாச கூலிக்காரனுங்களுக்கு கம்மி பண்ணிடு.. வாணாம், வாணாம் அத்த காண்டி சூப்பர் யோசனை சொல்றேன்.. இந்த டேக்ஸ் புடிச்ச காசை அவங்க ஸம்ஸாரத்தோட பேங்க் அக்கவுண்டுல போட்டுடு.. அல்லாரும் உன்னை மாதிரி ஆரும் இல்லே ராசானு பாடுவாங்க..

  அப்பாலிக்கா அல்லா திட்டத்துக்கும் நீ வாயிலே நுழையாத பேர் வெக்கறே..உங்கூர்ல இன்னவேனா கூப்டுக்கோ, தமிள்நாட்ல இன்னொரு பேரு வெச்சிடு.. பேட்டி பச்சாவோன்னு சொன்னா ஆருக்கு புரியும், சொல்லு.. மகள் திருமகள் அப்படின்னு மன்சுல நிக்கற மாதிரி தமிள் பேர் வெய்யி..இன்னா ?

  ஏதோ பண வீக்கத்தை கொற்ச்சிட்டேன்னு சொன்னா, ஆருக்கு பிரியும்..காந்தி மண்டைல அடிச்சா வீங்கும்..ரூவா நோட்ல இருக்கற காந்தி மண்டைல அடிச்ச்சா வீங்குமா..நம்ம ஜனங்களுக்கு இதெல்ல்லாம் தெரியாது.. மாமா போன வருசம் உங்கூலி ரெண்டாயிரம், நீ அதுல எட்டு புல் வாங்கலாம்.. அதே காண்டி இந்த வருசம் அதே காசுக்கு ஒரு கோட்டரும் கூட வாங்கிக்கலாம்..அப்டி தெலிவா சொல்லு தலீவா..

  அல்லாத்தியும் காண்டி முக்கிமானது..இந்த அக்கா ..அதான் பப்பறக்கான்னா தலை விரிச்சி போட்ருக்குமே ..தமிலிசை அக்கா..அது இசை இல்லை இம்சை..அத்த ஊட்டுக்கு அனுப்பிட்டு விவரமா படிச்சவரா பாலீஷா பேசற ஆளை இட்டாந்து வை..

  நீ அப்புறம் பாரு..ஆயுசுக்கும் நீ தான் ராஜா…கெலிச்சுக்கிட்டே இருப்பே..

  சரி ..வாத்யாரே..நேரமாச்சி, சம்சாரம் மசாலா அரைக்க வெயிட்டிங்.. நா கழட்டிக்கிறேன்..பாரத் மாதா கி ஜெய்..

  எழுத்து: மயிலாப்பூர் மக்கு @  V. வெங்கடேஷ், சிங்கப்பூர்

  1 COMMENT

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-