December 5, 2025, 11:43 PM
26.6 C
Chennai

ஊரடங்கின் இறுக்கமும் தளர்வும்! பிள்ளைகள் என்ன செய்வார்கள்?!

james-9th-std
james-9th-std

இறுக்கமும் தளர்வும் இரு இயல்பு நிலைகள் ! ”வெயிலின் அருமை நிழலில் தெரியும்” என்ற பழமொழி நமக்குப் பரிச்சயமானது. அது போலவே, இறுக்கத்தின் அருமை தளர்வில் தெரியும் ! சில சமயங்களில், தளர்வின் அருமை, பெருமையும் நம் இறக்கத்தில் தெரியலாம்.

வலைதளங்களில், நேற்று ஒரு கேலிக் குறுஞ்செய்தி உலா வந்து கொண்டிருந்தது !

“முன்னெல்லாம் கொரோனா வந்தால்…. வீட்டுக்கே வந்து ஆம்புலன்ஸ் வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாங்க ! மூணு வேளை சாப்பாடு போட்டு, உடல் சீரானதும், கை தட்டி, பிஸ்கேட், பழம் எல்லாம் கொடுத்து, பிரியாவிடை கொடுத்து, அவங்களே வண்டியிலே கொண்டு வந்து விடுவாங்க …. ஹூம்ம்ம்… அது ஒரு கனாக் காலம் !” – இது தான் அந்த செய்தி !

கடந்த ஆண்டு வந்த கொரோனா தாக்க நிகழ்வுகளுக்கே இப்படி ஒரு செய்தி என்றால், காலங்காலமாய் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு “அவர்களின் கனாக் காலங்களை “ நினைத்து எத்தனை ஆதங்கம் இருக்கும் !

பள்ளிக்குத் தினமும் சென்று வந்த காலத்தில்….
இறுக்கமாக இருந்திருக்கும் ! ஒரு நாள் விடுமுறை கிடைக்காதா ! சற்று “ஃப்ரீயாக” தளர்வாக இருக்க மாட்டோமா என மனம் ஏங்கித் தவிக்கும் !

school-1
school-1

பள்ளி வளாகங்களில், ஒரு பாடவேளை முடிந்து அடுத்த பாடவேளைத் தொடக்கத்தில், சற்று தளர்வான சூழ்நிலை இருக்கும் ! பிள்ளைகளின் சிறு சிறு பேச்சுகள், இரைச்சல் வடிவில் வரும். சிறு இடைவேளை, மதிய உணவு இடைவேளை என்றால், பேரிரைச்சலாக இருக்கும்!

பாடவேளைகள் ஆரம்பித்தவுடன், மெல்ல மெல்ல ஆரவாரம் அடங்கும் ! அதுவும் சில பாட ஆசிரியர்களின் கண்டிப்பான குரலும் தோற்றமும், மாணவர்களுக்கு ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தும் ! அந்த வகுப்புகளில் சலனமற்ற நிலை விரைவாக வரும் ! அந்த பாடவேளை முடியும் போது தளர்வும், சலனமும், கூச்சலும் சற்று அதிகமாகவே இருக்கும்!

இறுக்கமான சூழலில் தொடர்ந்து இருக்கும் போது, சில மாணவர்கள் சுழலுக்கு ஏற்ப மாறி, வகுப்பில் கவனம் செலுத்துவர். சில மாணவர்களோ மன அழுத்தம் அடைவார்கள்.

வகுப்பறைகளில் இறுக்கமும் தளர்வும் ஆசிரியர்களின் அணுகுமுறை, மாணவர்களின் மனநிலை,பாடங்களின் சுமை பொறுத்து மாறுகிறது !

உடற்பயிற்சி வகுப்பு அல்லது கலைத்திறன் வகுப்புகள் பெரும்பாலான மாணவர்களுக்கு பிடிக்கும் ! அத்தகைய வகுப்புகளில், தளர்வும் இருக்கும், அமைதியான போக்கும் இருக்கும்!

எப்போதும் அடக்கி வைத்து, இறுக்கமான சூழலில் பிள்ளைகளை வைப்பது மனோரீதியான பிரச்சனைகளை உருவாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை !

அதே சமயம், தளர்வான சூழல்களை ஏற்படுத்தும் போதும், திட்டமிடுதலும்,கண்காணிப்பும், அதித விளைவுகளை எதிர்கொள்ள தேவையான கண்ணோட்டமும் தேவை ! இல்லையென்றால், நம் முயற்சிகள் அனைத்தும் வியர்த்தமாகி விடும் !

பள்ளிகளில்,மதிய உணவு இடைவேளையில், முதல் ஐந்து நிமிடங்களும், கடைசி பத்து நிமிடங்களும், முதல்வரும், சில ஆசிரியர்களும் வளாகத்தைச் சுற்றி சுற்றி வருவார்கள் ! இடையில் கொஞ்ச நேரம் மாணவர்கள் உணவு உண்ணும் போது அவர்கள் கூட தளர்வாக இருக்கலாம் !

முன்பு, விடுமுறை கிடைத்தால், இறுக்கம் தணிந்து பள்ளிக்குப் போகவேண்டாமே என்ற தளர்வான உணர்வுடன் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இன்று வீட்டில் இருப்பதே மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது ! பள்ளிக்குச் செல்லும் வண்ணம் தளர்வுகள் வருமா என ஏங்கித் தவிக்கிறார்கள் !

மாணவர்கள் மட்டுமல்ல ! எல்லோருக்குமே இறுக்கமான சூழ்நிலை தான் இன்று ! சொந்த ஊருக்குப் போவது என்பது அநேகம் பேருக்கு மனநிறைவான அணுபவமாக இருந்தது போக, தளர்வுகளை அனுசரித்து, இறுக்கமான சூழலில் பயணப்பட வேண்டி இருக்கிறது !

மன இறுக்கத்தில் இருந்து விடுபட, தியானம், சிறு உடற்பயிற்சிகள், இறை வழிபாடு, வீட்டு வேலைகளை அனைவரும் செய்தல் என்பதைத் திட்டமிட்டு, பிள்ளைகளுக்கும் அதில் பங்கேற்க வைக்கலாம் !

இறுக்கத்தில் இருந்து விடுபடுவோம்  என்ற நம்பிக்கையை அறிவுரைகள் மூலமாக அல்லாமல் செயல்கள் மூலமாக கோடிட்டுக் காட்டுவோம் !

கட்டுரை: கமலா முரளி

1 COMMENT

  1. முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்

    அருமை ஸ்கோதரி. பள்ளி ஆசிரியர் என்பதால் பள்ளியில் மாணவர்களின் மன நிலையை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories