திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றி என்ற செய்தி வெளிவந்து கொண்டிருந்தபோதே பாஜக தொண்டர்கள் அம்மாநிலத்தில் தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 25 வருடங்களாக ஆட்சி செய்த வந்த கம்யூனிஸ்ட்கள் ஆட்சியின்போது வைக்கப்பட்ட லெனின் சிலை நேற்று அகற்றப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவ்வப்போது தனது கருத்துகளால் சர்ச்சைகளை உருவாக்கி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சற்று முன்னர் தனது டுவிட்டரில், ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்தார்.
ஆனால் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அவர் ஒருசில நிமிடங்களில் இந்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்தவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Wish it comes true. Hats off to Raja.