ஜியோவுக்குப் போட்டியாக ஐடியா, ஏர்டெல் ப்ரீபெய்ட் சலுகை!

இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்

ஜியோவுக்குப் போட்டியாக,  ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள், ப்ரீபெய்ட் பிளான்களில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளன. ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் தங்கள் பிளான்களின் மூலம் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. துவக்கத்தில்  இலவசமாக அனைத்து சேவைகளையும் வழங்கியது. பின்னர் படிப்படியாக கட்டணங்களை நிர்ணயித்தது.

ஆனாலும், ஜியோ சேவைகளில் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள், தொடர்ந்து ஜியோ சேவைக்கு மாறி வருகின்றனர்.

இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

ஏர்டெல்

* ரூ.448 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி

* ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து 91 நாட்கள் வேலிடிட்டி

ஐடியா

* ரூ.449 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி

* ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து 91 நாட்கள் வேலிடிட்டி – என மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

1 thought on “ஜியோவுக்குப் போட்டியாக ஐடியா, ஏர்டெல் ப்ரீபெய்ட் சலுகை!

  1. கிட்டத்தட்ட நீங்களும் அரசாங்கம் மாதிரிதான் இலவசங்களை நீங்களா கொடுத்தாதான் உண்டு .நீங்க யாருமே அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.