குணமாக காரணமான மருத்துவர்களுக்கு நன்றி: அமித்ஷா!

இந்தியா சற்றுமுன்
amith sha
file pic

சமீபத்தில் பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

55 வயதாகும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அமித்ஷாவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் தில்லி அருகேயுள்ள ஹரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு பிறகு அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில தினங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் குணமாக உதவி புரிந்த மருத்துவர்களுக்கு நன்றி என அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.