ஊடகத்தின் எல்லை கடந்த ‘தி ஹிந்து’! வேறு நாடாக இருந்தால்…?!

“ரபேல் விமானம்” சார்ந்து தி இந்து பத்திரிக்கை & பத்திரிக்கையாளர் ராம் வெளியிடும் செய்திகள் முழுக்க தவறானது போலியாக ஜோடிக்கபட்டது என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வருகிறதே? தி இந்து பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் என் போன்றவர்களுக்கு தங்கள் பதில் என்ன மாரிதாஸ்? {கேள்வி: பிரியா}

எனக்குப் பிடித்த நிர்வாகியும், இந்தச் சமூகத்தினை சரியான எடைபோட்டவருமான பெஞ்சமின் பிராங்கிளின் ஒருமுறை இப்படிக் கூறுகிறார் “Half a Truth is often a great Lie”. இன்று இந்த வாக்கியம் திஇந்து அதன் தலைவர் ராம் அவர்களின் பத்திரிக்கை தொழிலுக்குச் சரியாக பொருந்தும். {கட்டாயம் பெஞ்சமின் பிராங்கிளின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும். அதில் சூழ்நிலைகளை அவர் கையாளும் விதமும், தன் சக மனிதர்களை அவர் புரிந்து கொண்ட தெளிவும் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கிய பாடம்.}

சரி விசயத்திற்குள் வருவோம்:

இன்று The Hindu & ராம் தங்களது முழு மதிப்பையும் இழந்து நிற்கிறார்கள். இந்தச் செய்தித்தாளினை வாங்குவதை, இதன் செய்தி படிப்பதையும் அனைவரும் நிறுத்திவிடுவது என்னைக் கேட்டால் வீட்டுக் குழந்தைகளுக்கு நல்லது. ராம் தன்னுடைய வழக்கமான உண்மையைத் திரிக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு படி மேலே சென்று அவதூறு பரப்புவதைத் தாண்டி கூச்சம் இல்லாமல் முழு உண்மை மறைக்கும் வேலையைச் செய்துவிட்டு “உண்மை ஆராய வேண்டும்” என்று தந்திரமாக நழுவுகிறார்.

அதுவும் இதைத் தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடனே வெளியிட்டுள்ளார். இவர் நரேந்திர மோதி எதிர்ப்பில் செய்வதாக சிலர் நினைக்கலாம். அப்படி அல்ல. தி இந்து ராம் பொதுவாக இந்த இந்தியாவை விடச் சீனாவுக்கு நல்ல விசுவாசி என்பது என் கருத்து. அவருக்கு இங்கே தி இந்து என்ற பத்திரிக்கை வியாபாரம் இருக்கு அவ்வளவு தான் மற்றபடி இந்த நாட்டை உடைக்க இந்த நாட்டின் ஒற்றுமையைக் கெடுக்க என்ன செய்யலாம் என்ற சீனாவின் எண்ணம் தான் ஓய்வில்லாத சிந்தனையாக உள்ளது பலகாலமாக. அதை நான் நன்கு பல நேரம் உணர்ந்தவன். சர்வதேச ஊடகங்கள் பலவற்றுடன் இணைந்து இதைச் செய்துகொண்டுள்ளார்.

இன்று அதன் உட்சபட்ச முகத்தைக் காட்டியுள்ளார் ராம் அவ்வளவு தான். அவருக்கு இந்தியா பிடிக்கவில்லை, இந்தியன் பிடிக்கவில்லை, இந்து பிடிக்கவில்லை அதனை நேசிக்கும் எவரையும் பிடிக்கவில்லை. அந்த இந்தியன் இந்து என்ற சிந்தனையை முழுமையாக உடைக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிறார்.

தி இந்து பத்திரிக்கையை மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று என்னைக் கேட்டால் சில எடுத்துக்காட்டு உங்களுக்கு:

1) சுவாதி படுகொலை செய்யப்பட்ட நேரம். பெரும் விவாதமாகிக் கொண்டிருந்த நேரம். ஒரு கட்டத்தில் அது பட்டியலினத்து சமூகம் ராம் என்றும் சுவாதி ஜாதியும் பிடித்து சாதிய விசயமாக உருமாறிக் கொண்டிருந்தது. அப்போது “35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பில் மீனாட்சிபுரம்” என்ற கட்டுரையை தி இந்து வெளியிட்டது. நாள்: 03-07- 2016.

அந்தக் கட்டுரையில்…

மதம் மாறிய சுலைமான் கூறும்போது, “மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை காரணமாக ஒட்டுமொத்தமாக மதம் மாறினோம். மதம் மாறிய பிறகு எங்களது மரியாதை உயர்ந்துள்ளது. முன்பு எங்களை மேல்வர்க்கத்தினர் வா, போ என மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். இப்போது வாங்கள், போங்கள் என மரியாதையாகப் பேசுகிறார்கள். எங்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.”

இந்தப் பகுதி திட்டமிட்டு சொருகப்பட்டிருக்கும். கொலை நடந்ததிற்கும் – கொலைக்குக் காரணமான ராம் மீனாட்சிபுரம் சார்ந்தவர் – அந்தக் கிராமம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த முக்கிய நிகழ்வுக்கும் தொடர்பு படுத்தலாம். தவறல்ல ஆனால் அந்தச் செய்தியை அந்த அதிர்வைப் பயன்படுத்தி மதம் மாறியதால் தான் நாங்கள் மரியாதையாக நடத்தப்படுகிறோம் என்ற சொருகல் எதற்கு???

இது எதனால் செய்தார்கள்? அதற்கு பதில் வேண்டும் என்றால் அடுத்த 20 நாட்களில் வந்த இன்னொரு செய்தியை பார்க்க வேண்டும் அது “வேதாரண்யம் அருகே கோவில் வழிபாட்டு பிரச்சனையில் 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு” என்று செய்தி. இதை தான் தூண்டிவிட நினைத்தார் ராம் அதை செய்தார்.

இது இதான் தி இந்து செய்யும் வேலை…. எந்தப் பரபரப்பு செய்தியில் எதைத் திணிக்கலாம் என்று கொஞ்சம் கூடக் கூசாமல் தந்திரம் செய்யும் கூட்டம் இது.

2) பக்கத்து நாடுகளின் ஆதரவை இழக்கிறோமா? அப்படி ஒரு ஆர்டிக்கல். நாள்: 30-08-2017, இதை எழுதியவர் சுஹாசினி ஹைதர். {எனக்குத் தெரிந்து ஒரு நாளு இல்லை ஐந்து விசயங்களை வைத்துக் கொண்டு 50,60 கட்டுரைகள் அதைச் சுற்றியே விதவிதமாக எழுதி பத்திரிக்கையாளராக சொல்லி இந்திய அரசு நடவடிக்கைகளை எழுதும் நபர்.}

அதில் விசயம் என்னவென்றால் “இலங்கை ஹம்பனதோட்டத் துறைமுகக் கட்டுமானத் திட்டத்தைச் சீனா கைபற்றிவிட்டது. இது நரேந்திர மோதி அரசு தவறாக செல்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கி இருப்பர்”. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த projects எடுத்துச் செய்ய ஆகும் செலவு குறைந்தது 28,000கோடி. அது அல்ல பிரச்சனை. ஆனால், அதை எடுத்தால் இங்கே செய்தி என்னவாக இருக்கும்? இலங்கை தமிழர்களைக் கொலை செய்கிறார்கள் – மோடி அரசு இலங்கைக்குத் துறைமுகம் கட்ட 28,000கோடி கொட்டி செலவு செய்கிறது? இது தமிழர்களின் மனதைக் காயப்படுத்துகிறது – என்று செய்தியை அப்படியே திரித்திருப்பர்…. ஆனந்த விகடன் எல்லாம் நான்கு பக்கத்துக்குச் சிறப்பு தொகுப்பே போட்டுவிடுவார்கள். அதில் விசேசம் என்னவென்றால் “அடுத்து சீனாவை ராஜதந்திரரீதியில் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும் இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அப்பட்டமாகச் சீனாவுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை வெளிப்படையாக தி இந்து எழுதியிருக்கும்.

மக்கள் மத்தியில் எப்படி தவறாக பிம்பத்தை உருவாக்குவது என்று தி இந்து அதன் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம், சீனாவின் அடிமைகள் கூட்டம் எப்படியாவது இந்த மோடி அரசைக் கலங்கப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதற்கும் இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

3) நரேந்திர மோடி தலைமையிலான அரசு விளம்பரத்திற்கு ₹1,285 கோடி செலவு செய்துள்ளது RTI மூலம் வெளியாகியுள்ளது. இது 2017ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான செய்தி. இதே செய்தி அதே ஆண்டு டிசம்பரில், அடுத்து 2018 ஆம் ஆண்டு இரு முறை, “3,755 கோடி செலவு” , “4,300 கோடி செலவு” என்று செய்தி கிடைக்காத தகவல் கிடைத்தது போல் வெளியிட்டது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இதே செய்தியை Business Daily, தமிழ் இந்து, Frontline என்று தனது பிற செய்தி நிறுவனங்கள் வழியாகவும் வெளியிடப்பட்டது.

இதன் இடையே இதே செய்தியை NDTV போன்ற இன்னும் சில இடதுசாரி பத்திரிக்கைகள் சுமார் 20க்கும் மேற்பட்டவை வித விதமாக அடுத்த அடுத்த மாதங்கள் சரியான இடைவெளியில் வெளியிட்டன. ஆகக் கடந்த 3 வருடமாக இந்தச் செய்தி 2.3 மாதம் ஒருமுறை இல்லை விவாதம் ஆக்கவேண்டும் என்ற விதமாக வெளியிட்டுவந்தன. இதில் தவறு இல்லை. ஆனால் இவர்கள் வெளியிட மறுத்த உண்மை என்னவென்றால்… எதற்காக செலவிடப்பட்டது? எப்படிச் செலவிடப்பட்டது என்பது தான். பலமுறை நான் இதைத் தீவிரமாக எதிர்த்துள்ளேன்.

எந்த டீவி மீடியா மக்கள் நலத்திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக வேலை செய்யும்? தி இந்து ராம் இலவசமாக விளம்பரம் செய்வாரா அரசின் திட்டத்தை? இல்லை அவர் மகள் லண்டன் Global Markets பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு இங்கே இந்தியாவில் வந்து சேவை செய்வாரா இலவசமாக? ஆக மக்களுக்குத் திட்ட விவரங்களைக் கொண்டு செல்ல அரசு விளம்பரம் செய்வது ஆக அவசியமான தேவை. அது முறையாக நடக்கிறதா என்று விரிவாக ஒரு ஆய்வு அல்லவா ஒரு பத்திரிக்கை செய்தியாக இருக்க வேண்டும்? தி இந்து ராம், NDTV இவை எல்லாம் இதைச் செய்ய விரும்பவில்லை. ஏன் என்றால் இது பத்திரிக்கைகளே கிடையாது, குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் மனதில் வைத்துக் கொண்டு செய்யும் உள்ளடிவேலைகள் தவிர வேறு இல்லை.

கொடுமை என்னவென்றால் அரசு விளம்பரத்தில் லாபம் ஈட்டுவதே இவர்கள் தான். அரசு விளம்பரத்தையும் வாங்கிக்கொண்டு அதன் லாபத்தையும் திண்றுவிட்டு – அந்த விளம்பரத்தைச் செய்ததையே ஒரு செய்தியாக எதிர்மறையாகக் கொண்டு சேர்க்கும் அந்த கீழ்த்தரமான செய்தி திரிக்கும் புத்தி இருக்கே அது தான் தி இந்து.

எப்ரல் 2017ல் இந்திய ராணுவம் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த நேரம் – போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது தி இந்து அந்தச் செய்தியின் இடையே வழக்கம் போல இரு பகுதியை இணைத்தார்கள். அதில் சொல்லப்பட்ட செய்தி “பொதுமக்கள் வெளியேற்றிய ராணுவம் அவர்கள் அன்றாட வேலைவாய்ப்பும் வருமானத்தையும் கணக்கில் கொள்வது இல்லை” என்ற ரீதியில் அந்த பகுதியைக் கோர்த்துவிட்டிருந்தது. ராணுவம் பாக்கிஸ்தான் இந்தியா என்று நாட்டு பற்று எங்கே வருமோ அந்த இடத்தில் இந்தவிதமான இடைச்செய்திகளை இணைத்து அழகாக மட்டப்படுத்தி அந்த இடத்தில் ராணுவத்தினைக் கேள்வி எழுப்பும் வேலையை திஇந்து அழகாக இழுத்துவிட்டுச் செய்யும் எப்போதுமே.

தி இந்து எந்த அளவிற்கு இந்தச் சமூகத்தில் தன் தந்திரமான வெக்கம்கெட்ட நரிதனத்தை காட்டுகிறது என்று, இப்படி என்னால் பல நூறு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும். அது பத்திரிக்கை சுதந்திரம் என்று ஏன் எடுக்கமுடியவில்லை என்றால் – தனிநாடு கோரும் (ஸ்பெயின்) கேட்டலோனியா விவகாரம் பற்றி வக்காலத்து வாங்கும் விதமாகக் கட்டுரைகள் பல எழுதியுள்ள இதே தி இந்து என்றாவது சீனா ஆக்கரமிப்பில்லுள்ள திபத் பற்றி வாய் திறக்குமா? கிடையாது!! வாய்ப்பே இல்லை. தி இந்து இல்லை ராம் இல்லை அதன் எந்த பிற செய்தி ஊடகவாயிலாகவும் திபத் மக்கள் குரல் வெளியிடப்படாது.

திபத் மட்டும் அல்ல மன்கோலியா, தைவான், ஜிங்ஜியாங் என்று எதைபற்றியுமே தி இந்து எழுதுவதில்லை. ஜிங்ஜியாங் இஸ்லாமியர்களுக்குச் சீனாவின் கம்யுனிஸ்ட் அரசு கொடுக்கும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து வாயைத் திறக்க கூறுங்கள் இந்த NDTV முதல் தி இந்து வரை? மாட்டார்கள்!

இறுதியாக :

தி இந்து, The Hindu (English), Business Daily, Frontline, Indian Express, NDTV இப்படி ஒரு கூட்டமே இங்கே உள்ளது. அதே போல் தமிழகத்தில் பெரும்பாலான செய்து ஊடகங்களில் இடதுசாரி சிந்தனையாளர்கள் தான் பொறுப்பில் இருப்பர். இந்த பெரும் கூட்டமே இன்று நேற்று அல்ல காலம் காலமாகச் செய்தி துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள். இதன் பலத்துடன் அரசு பொது துறை நிறுவனங்களை நாசம் செய்தது போதாதென்று நாட்டின் பிரிவினைக்கும் மறைமுகமாக வேலை செய்வர்.

ஆகச் செய்தி நிறுவனங்களில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர் களையும் சராசரி மீம்ஸ் கிரியேட்டர்களையும் பெரிய வித்தியாசம் பார்க்க தேவை இல்லை. உணர்வைத் தூண்டும் விதமாகச் செய்தி இருக்க வேண்டும் அவ்வளவு தான். அதை ஆராயும் அளவுக்கு எல்லாம் 99% பத்திரிக்கையாளர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட ஆர்வமோ அக்கரையோ இல்லை என்பது தான் உண்மை. அதை விட அசைக்க முடியாத உண்மை அவர்கள் பெரும்பாலும் சில அரசியல் கட்சிக்கு வேலை செய்கிறார்கள் எனவே தாங்கள் செய்தி வெளியிடுவதை விட தங்கள் எண்ணத்தை மக்களிடம் பரப்ப விரும்புகிறார்கள் என்று தான் கூறவேண்டும்.

கம்யுனிஸ்ட்களுக்கு உத்தரவுகள் இந்த நாட்டின் வெளியில் இருந்து வருகிறது அது நாட்டிற்கு நல்லதல்ல எனவே கம்யுனிஸ்ட் நம்பகமானவர்கள் அல்ல இது காந்தி இவர்களைப் பற்றி கூறிய அசைக்க முடியாத உண்மை. இது இன்றும் 100% பொருந்தும். படித்த நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஊடக சுந்தரம் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் – தனிச் சட்டம் இயற்றி இந்தச் செய்தி ஊடகங்களைக் கொஞ்சம் ஒடுக்குவது நல்லது.

-மாரிதாஸ்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...