
சிகிச்சைக்காக வந்த இருவரைக் கொன்று உடலுறுப்பு திருடப் பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளால், திருச்சி மருத்துவமனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் விபத்தில் காயமடைந்த இருவரை, உடலுறுப்புகளுக்கான கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த மாரியப்பன். இவரது மனைவி மீரா(51), மகன் தினேஷ்குமார் (31). வெல்டிங் பட்டறையில் தினேஷ் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மீரா, தினேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் சுக்காம்பார் என்ற இடத்தில் மரத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மீராவும், தினேஷ்குமாரும் படுகாயமடைந்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அவர், அங்கிருந்த மீரா, தினேஷ்குமாரை சந்தித்து, தங்களது மருத்துவமனையில் குறிப்பிட்ட நபர்களுக்கு இலவச சிகிச்சை செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார். அதன்படி தங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும், மருந்துகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தாய் மற்றும் மகனை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களது ஆம்புலன்சில் திருச்சிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த 13ஆம் தேதி மீரா மூளைச்சாவு அடைந்ததாக, அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் பிறருக்கு பயன்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.
இதனால் மீராவின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இந்நிலையில் 16ஆம் தேதி தினேஷ்குமார் இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த தினேஷ்குமாரும் இறந்தது, அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் தினேஷ்குமாரின் உறவினர்கள் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் மீரா மற்றும் அவரது மகன் தினேஷ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மீராவிடம் இருந்து இரண்டு உறுப்புக்கு அனுமதி பெற்று விட்டு 11 உறுப்புகள் எடுத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
மீராவின் உடல் உறுப்புகளை எடுத்ததில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தனர். இந்தப் புகார் தொடர்பாக தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தினேஷ்குமாரின் உடல் திருச்சி பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது. விபத்து தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாட்களாகியும் தினேஷின் உடல் உறவினர்களிடம் தராமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உறுப்பு திருட்டு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களை மிரட்டுவதாகவும் தினேஷின் உறவினா்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




இதைபà¯à®ªà¯‹à®² மரà¯à®¤à¯à®¤à¯à®µ மனைகள௠மனித உயிரà¯à®•ளோட௠விளையாடà¯à®®à¯ எனà¯à®ªà®¤à¯ அனà¯à®±à®¾à®Ÿ நிகழà¯à®µà®¾à®•ிவிடà¯à®Ÿà®¤à¯. நம௠அரசின௠சà¯à®•ாதாரதà¯à®¤à¯à®±à¯ˆ எனà¯à®© செயà¯à®•ிறத௠? அரசியலà¯à®µà®¾à®¤à®¿à®•ள௠à®à®©à¯ போராடà¯à®Ÿà®®à¯ நடதà¯à®¤à®µà®¿à®²à¯à®²à¯ˆ ? எலà¯à®²à¯‹à®°à¯à®®à¯‡ கூடà¯à®Ÿà®¾à®³à®¿à®•ளா ?