நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்! : ராமதாஸ் பேச்சு!

Reporters Diary அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை நெல்லை
ramadoss - 2026

நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் தேர்தல் வைப்புத் தொகையை இழக்க வேண்டும். அந்த அளவு உழைத்து நம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார் பாமக. நிறுவுனர் ராமதாஸ்.

கடலூர் பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “ வரும் தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால் நம்மை எதிர்த்து போட்டி இடுபவர்கள் டெபாசிட் வாங்கக் கூடாது.

அ.தி.மு.க என்றவுடன் நமது நினைவுக்கு வருவது சத்துணவுத் திட்டம்தான். ஜெயலலிதா சமூக நீதி காத்த வீராங்கனையாகத் திகழ்ந்தார்” என்று பேசினார்.

ramadoss - 2026

தற்போது பாமக., ஏழு தொகுதிகளை அதிமுக., கூட்டணியில் முதல் ஆளாக முந்திக் கொண்டு பெற்றிருக்கிறது.  இதுவே மற்ற கட்சியினருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. திமுக., கூட்டணியிலும் இந்தத் தொகுதிப் பங்கீடு பெருமளவு எதிரொலித்தது.

இதனிடையே, பாமக., தங்கள் கூட்டணியை விட்டு நழுவிப் போனதால் பெரும் ஏமாற்றமும் கோபமும் அடைந்த திமுக., பாமக.,வுக்கு எதிராக மக்களை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முதல் படியாக, வன்னியர் சங்க நிறுவுனர் குரு விவகாரத்தில் பிரச்னையை எழுப்பியது. குருவின் குடும்பத்தாரை உசுப்பி விட்டு, ராமதாஸூக்கும் பாமக.,வுக்கும் எதிரான கருத்துகளை பகிரங்கமாகப் பேச வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக., தமது வன்னியர் ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் தொண்டர்களை இவ்வாறு ஊக்கப் படுத்தி வரூகிறது.

1 thought on “நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்! : ராமதாஸ் பேச்சு!”

  1. புரட்சி தலைவர் MGR புரட்சித்தலைவி JJ, இவர்களின் நல்ல திட்டங்கள், மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டுமென்று பாடுபடும் BJP யின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றாலே வெற்றி நிச்சயம். ராமதாஸ் செய்வாரா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.