தெளிவான நியாயமான தீர்ப்பு வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

stalin tweet - 2026

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் தகுதி நீக்க விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றியமைத்தது. அதுவரை, எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதிலோ, தொகுதிகளுக்கு மறு தேர்தல் நடத்துவது தொடர்பாகவோ எந்த முடிவும் எடுக்கப் பட முடியாது என்று கூறியது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்துள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தாமதிக்கப்பட்ட நீதி தடுக்கப் பட்ட நீதி என்று கூறி, விரைந்து தெளிவான தீர்ப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் இது குறித்து இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்- என்று கூறியுள்ளார்.

 

2 thoughts on “தெளிவான நியாயமான தீர்ப்பு வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!”

  1. <> தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன் <> இப்படி ஸ்டாலின் சொல்வது விஷமத்தனமானது, 2G தீர்ப்பு தாமதிக்காமல் வந்ததா?, மீண்டும் நீதிமன்றத்துக்கே சென்றுவிட்டது, இதற்கு என்ன சொல்வார்?

  2. இந்த ஸ்டாலின் அறிக்கை எல்லா தீர்ப்பிற்கும் பொருந்த வேண்டும். ௨ஜி ௩ஜி அவர்கள் அனுமதி அளித்த தூத்துக்குடி ஸ்டெரிலைட் திட்டம் , கச்சத்தீவு , தமிழ்வழிக்கல்வி மூடுவிழா ஆங்கிலவழி படிப்பை சுயநல டை ,சூ வியாபாரத்திற்கு பள்ளிநடத்துதல் , மற்றும் பல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.