தாது விருத்திக்கு…
முருங்கைப் பிஞ்சை நெருப்பில் வாட்டி சாறெடுத்து அரை அவுன்ஸ் சாறுடன் கால் அவுன்ஸ் தேன் கலந்து 20 நாள்கள் சாப்பிட தாது விருத்தி ஏற்படும்.
இலவங்கப்பட்டையை இடித்து தூள் செய்து சலித்து மூன்று கிரெயின் வீதம் காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட தாது விருத்தி ஏற்படும்.
தாய்ப்பால் விருத்திக்கு…
அஸ்வகந்தி செடியின் இலைகளை கஷாயம் வைத்து சாப்பிட பால் பெருகும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டினாலும் தாய்ப்பால் சுரக்கும்.
ஞாபக மறதிக்கு…
கொஞ்சம் தேங்காயையும் கொஞ்சம் பாதாம் பருப்பையும் சாப்பிட மாங்கனீஸ் சத்தும். ஃபாஸ்பரஸ் சத்தும் கிடைக்கும். ஞாபக மறதி என்பது பறந்து விடும்.
கரப்பான் சரியாக…
ஊமத்தங்காயை இடித்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி நீர் சுண்டியவுடன் எடுத்து வைத்துக் கொண்டு கரப்பான் மீது தேய்த்து வர குணம் தெரியும்.
கர்ப்பிணியின் வயிற்று வலிக்கு…
இரண்டு ஸ்பூன் மிளகு எடுத்து லேசாக வறுத்து கஷாயம் வைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் கற்கண்டை தூள் செய்து கலக்கிக் கொடுக்க வயிற்று வலி குணமாகும்.