நாசி கோரேங்
தேவையான பொருட்கள்
தாய் பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி சாதம் – 2 கப்(உதிரியாக வடித்து ஆற வைத்தது)
பூண்டு – ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 2 மேசைக்கரண்டி (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
முட்டைகோஸ் – 2 மேசைக்கரண்டி (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
ஃப்ரோசன் கார்ன் அல்லது வேக வைத்த சோள மணிகள் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு கீரை(தேவைப்பட்டால்) – ஒரு கைப்பிடி
வெங்காய தாள்(ஸ்ப்ரிங் ஆனியன்) – ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை(சீனி) – அரை தேக்கரண்டி
செய்முறை
காய்கறிகளை மேற்சொன்னது போல் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் உள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அதிக தீயில் 30 நொடிகள் வதக்கவும். அதனுடன் கேரட் மற்றும் சோள மணிகள் சேர்த்து வதக்கவும். முட்டைகோஸ் மற்றும் கீரையை சேர்த்து மேலும் 30 நொடி வதக்கவும்.
கடைசியாக சாதம், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
தீயின் அளவை அதிகமாக வைத்து 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கிளறவும்.
ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும். சுவையான நாசி கோரேங் தயார். சூடாக சாப்பிடவும்