ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சன்ஷைன் பள்ளி முன் அர்ஜுன் சம்பத் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்!

Published:

arjun sampath - 2026

வரும் சனிக்கிழமை திமுக.,வின் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்ஷைன் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தவை….

தமிழகத்தில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அமுல் படுத்த கோரியும், *இந்தி எதிர்ப்பு விசயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வகையிலும் சென்னை வேளாச்சேரி சன்ஷைன் பள்ளிக்கு முன்பாக கோரிக்கை ஆர்பாட்டம். நாள் : 08.06.2019 சனிக்கிழமை காலை 11.00 மணி

பாரத நாடு முழுவதும் மும்மொழிக் கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது மோடி அரசாங்கத்தின் புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டத்திலும் மும்மொழி கல்விக் கொள்கை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, இந்தி மொழி, ஆங்கில மொழி என மூன்று மொழிகளை கற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்தி மொழி வெறுப்புணர்வு உள்ளவர்களின் அரசியல் ஆதிக்கம் காரணமாக இருமொழிக் கல்விக் கொள்கை நடைமுறையில் உள்ளது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதன் காரணமாக தமிழக அரசின் கல்வி நிலையங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் விரும்பினாலும் இந்தி படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும் என்கிற மூட நம்பிக்கையை பரப்பி வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்திற்கு தீங்கு செய்து வருகின்றனர்.

வசதி வாய்ப்புள்ளவர்களும், இந்தி மொழி வெறுப்புணர்வு போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தாரும் குறிப்பாக தி.மு.க-வின் உயர்மட்ட தலைவர்களின் குடும்பத்தாரும் இந்தி மொழியை படித்து கல்வி, வேலை வாய்ப்புக்களில் முன்னேறியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மேலும் முஸ்லீம்கள் உருது மொழி படிக்க விரும்பினால் தமிழக அரசு அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருகின்றது. ஆனால் இந்தி படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கூட தமிழக அரசின் கல்வித்துறை தடை செய்கின்றது. இதன் காரணமாக் தமிழக மாணவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் தி.மு.க-வின் இருமொழிக் கல்விக் கொள்கை காரணமாக நவோதய பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் பள்ளிக் கூடங்கள் தமிழகத்திற்குள் வருவது தடைசெய்யப்பட்டுளது. கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான உண்டு உறைவிடத்துடன் கூடிய இலவச கல்வி தாய்மொழிக்கல்வி ஆகியவற்றை செயல்படுத்தும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஆகியவை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொள்வது இல்லை. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் பெரும் இழப்பபை அனுபவிக்கின்றனர்.

எனவே இருமொழிக்கல்விக் கொள்கையை கைவிட்டு உடனடியாக மும்மொழிக்கல்விக் கொள்கையை தமிழக அரசு எற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

*தமிழகத்தில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அமுல் படுத்த கோரியும்,
*மழலையர் பள்ளி – துவக்கப்பள்ளிகளில் கட்டாயமாக அனைத்துப் பாடங்களையும் தாய்மொழி மற்றும் தமிழ் வழியிலேயே கற்பிக்க வலியுறுத்தியும்,
*உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்புக்களை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமையும் கோரியும்,
*தி.மு.க.வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், ஸ்டாலின் குடும்பத்தினர் சென்னையில் நடத்தும் சன்ஷைன் (sunshine) பள்ளிக்கூடங்களில் CBSE பாடப்பிரிவில் இந்தி போதிக்கப்படுவதை குறிக்கும் வகையிலும்,

மேலும் துறைமுருகன் உள்ளிட்ட தி.மு.க-வினர் வர்த்தக நோக்கத்தில் தமிழகம் முழுவதும் நடத்துகின்ற CBSE பள்ளிகளில் இந்தி மொழி பாடமாக உள்ளதையும், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் முறையும் உள்ளது என்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

வரும் சனிக்கிழமை 08.06.2019 அன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின், மகள், மருமகள் நடத்துகின்ற சன்ஷைன் பள்ளிக்கூடங்களுக்கு முன்பாக சென்னை இ.ம.க. சார்பில் அடையாள முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை முழுவதும் உள்ள இ.ம.க. நிர்வாகிகள் பங்கேற்க வேண்டுகிறோம்… என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன் சம்பத்.

Related articles

Recent articles

spot_img