December 5, 2025, 1:55 PM
26.9 C
Chennai

ஜிம் பாடி வேணுமா? கம்முன்னு இது சாப்பிடுங்க! கோபுரந்தாங்கி!

kopuram thanki - 2025

கட்டடிட இடுக்குகளிலும் பாறைகள் மற்றும் புதர்களுக்குள்ளாகவும் முளைத்துக் கிடைக்கும் செடி இது. இது அழிந்து வரக்கூடிய ஒரு மூலிகையாக தற்போது இருக்கிறது. இந்த மூலிகைச் செடியில் உள்ள விதைப்பையானது நீர் பட்டதும் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது

ஏராளமான வைட்டமின்கள், கால்சியம் போன்ற சத்துக்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எக்கியாயிடின் மற்றும் பிளேவன் போன்ற மிகவும் அரிய வகையான தாதுக்களை இந்த மூலிகை கொண்டிருக்கிறது.

மேலைநாட்டு மருத்துவ முறையில் வியாதிகள் போக்கும் தன்மைக்காக, இந்த வேதிச்சத்துக்கள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன. அப்படிப்பட்ட அற்புதங்கள் நிறைந்த செடிகளை நம் வீட்டுக்கு அருகிலே இருந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

இன்றைய சூழலில் நாம் பெரும் பிரச்சினைகளாக நினைக்கும் பிரச்சினைகளுக்கு இந்த மூலிகை மிகச் சிறந்த மருந்தாக அமைகின்றது.

மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து, உடல் தசை நரம்புகளை வலுவாக்கி, உடலின் ஆற்றல் சக்தியை அதிகரித்து, பலவகையான வியாதிகள் நம் உடலை அண்டாமல் காத்து, உடல் இயக்கத்தை ஊக்கப் படுத்துவதால், மனித உடலையே கோபுரமாக சித்தர்கள் மறை பொருளில் உணர்த்தி, மனித உடலைக் காக்கும் இந்த அரிய மூலிகையை, கோபுரந்தாங்கி என அழைத்தனர். மேலும், சித்தர்கள் அருளிய காய கற்ப மூலிகைகளில் சிறப்பிடம், கோபுரந்தாங்கிசெடிக்கு இருக்கிறது.

இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது.

கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது.

பாம்பு, தேள், விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாகிறது. மலேரியா உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சலையும் குணமாக்கும்.

kopuram thanki 1 - 2025

கோபுரம் தாங்கி செடியானது, நில வேம்புவை போன்று இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும். விதைகள் நெல் போன்று இருக்கும்.

கோபுரம் தாங்கி செடியை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

இலை, விதை, தண்டு அடங்கிய கோபுரம் தாங்கி செடி ஒரு பிடி அளவு எடுத்து கொள்ளவும்.

அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடிக்கும் போது வயிற்றுப்போக்கு, நீர்த்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.

ஒரு பங்கு இலை பசையுடன், இரண்டு பங்கு நல்லெண்ணை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தேய்த்தால் முடி உதிர்வது கட்டுப்படும். புழுவெட்டு சரியாகும். முடி வளரும். இது தலை சூடு, வியர்வையை தணிக்கும்.

சம அளவில் இலை பசையை, கடுகு எண்ணையுடன் சேர்த்து குழம்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும்.

இதை பாம்பு, தேள், பூச்சிகள் கடித்த இடத்தில் மேல்பூச்சாக போடும்போது விஷம் தணிக்கிறது. கடி வாயில் பூசினால் வலி, வீக்கம் குறையும்.

இதன் இலையை அரைத்து நெற்றியில் போடும் போது தலைவலி சரியாகும்.

வேர் பகுதியை காயவைத்து பொடித்து வைத்து, காலை மற்றும் மாலையில் சிறிதளவு சாப்பிடும் போது எலும்புகள், தசைகள் பலப்படும். உடல் தேற்றியாக பயன்படுகிறது. சோர்ந்த உடலுக்கு பலம் தருவதாக அமைகிறது.

கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மில்லியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும்.

சிறுநீர் எரிச்சல் குறையும். கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும். கால், கை, மூட்டுகளில் ஏற்படும் வலியை விரட்டும்.

இந்த கோபுரம் தங்கி மூலிகையை சபநிவர்த்தி செய்து, காப்பு கட்டி எலுமிச்சை கனி பலி கொடுத்து, பொங்கல் நிவேதனம் செய்து, தூபம், தீபம் காட்டி பிடுங்கி வைத்து கொள்ளவும். இந்த இலையை வாயில் போட்டு மென்றுகொண்டு தாடையில் வைத்துகொண்டு கண்ணாடியை கற்கண்டு போல கடித்து துப்பலாம், கண்ணாடி வாயை கிழிக்காது ,

kopuram thanki 2 - 2025

இந்த மூலிகையின் வேரை தயத்தில் அடைத்து காலில் கட்டிக்கொண்டு பெரிய பாரங்கல்லை எட்டி உதைத்தால் பாராங்கல் உருண்டோடும் நம் காலுக்கு ஒன்றும் தெரியாது.

இருமலை போக்க கூடியதும், தோல்நோய்களுக்கு மருந்தாக
அமைவதும், பொடுகு தொல்லை, வெண்குஷ்டத்தை சரிசெய்ய கூடியதும், வயிற்று கோளாறை போக்கவல்லதும், புழுக்களை வெளித்தள்ள கூடியதும், வலி, வீக்கத்தை குறைக்க கூடியதுமான கோடக சாலையின் மருத்துவ பயன்களை அறிவோம்.

கோடக சாலை சிறிய நீல நிற பூக்களை உடையது. எலியின் காது போன்ற மிகச்சிறிய இலையை கொண்டது. படர் கொடியாக தரையோடு தரையாக இருக்கும். மரிக்கொழுந்து செடியை
போன்று காணப்படும். ஆற்றங்கரையோரம், மலைப்பகுதியில்
இந்த செடி வளரும். கோடக சாலை செடி நோய் எதிர்ப்பு சக்திமிக்கது.

இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி, சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.

நன்மை தரக்கூடிய கோபுரம் தாங்கி செடிகள் நீர்பாங்கான இடங்களில் புதர்போல் வளர்ந்து இருக்கும். இதன் இலையை அரைத்து நெற்றியில் போடும்போது தலைவலி சரியாகும்.

முடி வளரக்கூடிய தைலமாகவும் பயன்படுகிறது. மருத்துவ குணத்தை கொண்ட வேர் பகுதியை காயவைத்து பொடித்து வைத்து, காலை மற்றும் மாலையில் சிறிதளவு சாப்பிடும்போது எலும்புகள், தசைகள் பலப்படும். உடல் தேற்றியாக பயன்படுகிறது. சோர்ந்த உடலுக்கு பலம் தருவதாக அமைகிறது.

கோபுரந்தாங்கியின் இலையும் கொட்டைகரந்தையின் இலையும் சம எடை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு 100மி லிட்டராக காய்ச்சி தினமும் காலை குடித்துவந்தால் உடல் காய கற்பமாகி விடும்.

கோபுரம் தாங்கி செடி பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. வயிற்றை சுத்தப்படுத்துகிறது. காய்ச்சலை தணிப்பதுடன் சிறுநீர் பெருக்கியாக பயன்படுகிறது.

இலையை பயன்படுத்தி முடிகொட்டுதல், முடி உதிர்தலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு இலை பசையுடன், இரண்டு பங்கு நல்லெண்ணை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தய்த்தால் முடி உதிர்வது கட்டுப்படும். புழுவெட்டு சரியாகும். முடி வளரும்.

இது தலை சூடு, வியர்வையை தணிக்கும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கோபுரம் தாங்கி செடியை பயன்படுத்தி பூச்சிக்கடி, தேள்கடி, பாம்பு கடிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

சரும அரிப்பு, சருமத்தில் ஏற்படும் வெள்ளை நிற புழு வெட்டுக்கள், வெ்ணதிட்டுக்கள் ஆகியவற்றுக்கு வாரம் இரண்டு முறையாவது இந்த கோபுரந்தாங்கி இலைகளை மை போல அரைத்துத் தடவி வந்தால் நிச்சயம் உங்களுடைய சருமப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

கோபுரந்தாங்கி வேர் முதல் முழுமையான செடி, சிறுகண்பீளை, யானை நெருஞ்சில் இவற்றை சமூலமாக சேகரித்து அவற்றை அலசி நன்கு சுத்தம் செய்து வெயில் இல்லாமல் நிழலிலேயே உலர்த்தி எடுக்க வேண்டும். பின்பு அதேபோல் வெள்ளரிக்காய் விதைகளையும் காயவைத்து, இவை எல்லாவற்றையும் உரலில் அல்லது அம்மியில் நன்றாக இடித்து வைத்துக் கொண்டு, இந்த பொடியை அரை லிட்டர் நீரில் சுட வைத்து, மூன்றில் ஒரு பங்கு, இருநூறு மிலி அளவில் நன்கு சுண்டியதும், அதை காலையும் இரவும் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் பருகி வர, சிறுநீரக எரிச்சல், சூடு குணமாகி, சிறுநீர் நன்றாக வெளியேறும். கடுகடுப்பு நீங்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு

கோபுரந்தாங்கி குடிநீரை இரண்டு வாரங்கள் தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரக கற்கள் யாவும் கரைந்து வெளியேறி விடும். கோபுரந்தாங்கிமூலிகை, செம்பு போன்ற உலோகங்களையும், உப்புகளையும் கரைக்கும் ஆற்றல் மிக்கதால், சிறுநீரக கற்களை, விரைவில் சிறு நீரகத்திலிருந்து வெளியேற்றி, சிறு நீரகத்தை காத்து, உடல் நலத்தை சீராக்கும்.

கோபுரந்தாங்கி இலைகள், கொட்டைக் கிரந்தை இலைகள் ஆகிய இரண்டையும் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் போட்டு வேகவிடுங்கள். 100 மிலி அளவு வரும்வரை வற்றச் செய்ய வேண்டும்.

தொடர்ந்து தினமும் 48 நாட்கள், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் தசைகள் யாவும் இறுகி, உடல் நலமாகும். ஆயினும், காய கற்பம் எனும் இந்த மருந்தை உட்கொள்ள, சில பத்திய முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என பெரியோர் குறிப்பிடுகின்றனர்.

இதைக் குடித்தால் ஜிம்முக்குக் கூட போக வேண்டிய அவசியமே இருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories