திமுக., அந்த நாளில் இருந்து இன்று வரை பிண அரசியலைத்தான் நடத்தி வருகிறது என்பதை இன்றைய தமிழர்கள், நாட்டு நடப்பை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் நன்கு அறிவார்கள்.
கருணாநிதியின் அடியொற்றி, திமுக., வழி வந்த வைகோ., ஸ்டாலின் என எவரும் இதற்கு விதிவிலக்கல்ல! இன்றும் கூட நீட் தேர்வுக்காக கடைசி வரை திமுக., வை நம்பி, நீட் தேர்வு விலக்கப் பட்டு விடும் என்று சொல்லிச் சொல்லி ஒரு சிறு பெண்ணை ஏமாற்றி, வழக்கு போட வைத்து, அது தோல்வியில் முடிந்ததும் அந்தப் பெண் உயிரிழக்கக் காரணமாயிருந்து… உடனே அந்தப் பெண்ணின் உடலை வைத்துக் கொண்டே அரசியல் செய்தது திமுக.,!
அனிதா என்ற விவரம் அறியாச் சிறு பெண்ணின் உயிரைக் குடித்த திமுக., இன்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது அரசியல் விளம்பரங்களில் போட்டு, ஆதிக்கவாதி, அடிமை வாதி என்றெல்லாம் விளம்பரம் தேடுகின்றது.
தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டிவிட்டு, பத்துக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் அடையக் காரணமாக இருந்ததும் திமுக.,தான்~ தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அன்றே முடிவு செய்துவிட்டார்கள் கருணாநிதியின் வாரிசுகள். அதற்காக மேற்கொண்ட கலவர முயற்சிதான் ஸ்டெர்லைட் போராட்டம். இப்படி பிண அரசியல் நடத்தும் திமுக.,வின் குள்ளநரித்தனத்தை தோலுரித்துக் காட்டியவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.!
திமுக.,வின் வரலாற்றை நன்கு உணர்ந்தவர்கள் இதனை புதிதாகப் பேச மாட்டார்கள். ஏனெனில், தன் சாதியைச் சொல்லி, தன் பிச்சைக்காரத் தனத்தைச் சொல்ல், தனது வேலைவெட்டி இல்லாத வெறும்போக்குத்தனத்தைச் சொல்லி ஓட்டு கேட்பது கருணாநிதியின் குணம்.
தனக்கு ஓட்டு போட வில்லை என்றால், தமிழனை தற்குறி என திட்டித் தீர்ப்பதும் கருணாநிதியின் குணம். திமுக காரர்கள் பொய் சொல்வதில் கெட்டிக்காரர்கள். எம்ஜிஆர் காலத்தில் கருணாநிதி தூண்டுதல் பேரில் நாராயணசாமி ஒரு விவசாயப் போராட்டம் நடத்தினார். ஆனால் அவர் இந்தப் போராட்டம் தேவையில்லாதது என்பதை உணர்ந்து கொண்டு எம்ஜிஆரைக் கண்டு தனது வருத்தத்தைச் சொன்னார்.
இந்த வீடியோவைப் பாருங்கள் ஸ்டாலின் சொல்லுகிறார் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து விட்டு, மீண்டும் கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு கண்டார் என்று முழுப் பொய்யைச் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரின் பதிலையும் கேளுங்கள். உண்மை என்னவென்றால், எம்ஜிஆர்., கட்சி தொடங்கி ஆட்சி அமைத்த பின்னர், எம்ஜிஆர் மறைவு வரையிலும் கருணாநிதியை மக்கள் ஆட்சிக்கு வரவிடவேயில்லை !







இனà¯à®©à¯à®®à¯ கூடவ திரà¯à®¨à¯à®¤à®µà®¿à®²à¯à®²à¯ˆ – களவாணி எனà¯à®± சொல௠களஞà¯à®šà®¿à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®± தஙà¯à®•ள௠தநà¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ தீ ம௠காவà¯à®®à¯ தான௠காரணம௠எனà¯à®ªà®¤à¯ யாரà¯à®•à¯à®•à¯à®®à¯ மறகà¯à®•விலà¯à®²à¯ˆ.