கவலப்படாதீங்க.. டிஆர்… சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பப் பெண்ணே கிடைப்பா…!

Published:

t rajendar - 2026

கவலைப்படாதீங்க சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பத்திலிருந்து பெண் கிடைப்பாள் என்று டி ராஜேந்திருக்கு ஆறுதல் கூறுகிறார்கள் சமூகவலைதளத்தில்!

சிம்புவின் திருமணம் குறித்த கேள்வி தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது என்று தன்னுடைய வருத்தத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார் டி ராஜேந்தர்! இந்நிலையில், அவருடைய வருத்தத்துக்கு ஆறுதலாக சிலர் சமூக வலைதளங்களில் இவ்வாறு பதிவிட்டு வருகின்றனர்

டி ராஜேந்தரின் இளைய மகனும் இசையமைப்பாளருமான குறளரசனுக்கும் இஸ்லாமியப் பெண்ணான நபீலாவுக்கும் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது! இதற்காகவே இஸ்லாமியராக மதம் மாறினார் குறளரசன். அதை அடுத்து, இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்!

இதை அடுத்து, திங்கள் கிழமை நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சித் தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என பலரும் இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி ராஜேந்தர். அப்போது அவர் என்னுடைய இளைய மகன் திருமணத்தைப் பொறுத்தவரை நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் இல்லை; மதம் பார்க்க மாட்டேன் என்று சினிமாவில் மட்டும் சொல்பவன் இல்லை; என்னைப் பொறுத்தவரை என் மகன் மனதுக்கு பிடித்து இருக்கிறதா கல்யாணம் செய்துகொள்; உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கக் கூடியவன்!simbu nayanthara1 - 2026

எல்லோருமே அவரவர் குழந்தைகளின் நலனுக்காக தான் வாழ்கின்றனர்! அவர்களை படிக்க வைப்பதாகட்டும் உருவாக்குவதாகட்டும்… நான் என் பிள்ளைகளை நடிக்க வைத்தேன்; மியூசிக் அடிக்க வைத்தேன்; ஆயினும் ஓரளவுக்கு படிக்க வைத்தேன்!

ஆனால் மற்ற தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்; ஆளாக்குகின்றனர்! ஆனால் கல்யாணம் என்று வரும்போது அப்பா அம்மா விருப்பப்படிதான் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது! இது என் கருத்து !

பிள்ளைகள் ஆசைப்பட்டால் துணி வாங்கி தருகிறோம் பைக் வாங்கித் தருகிறோம் அதுபோல் கல்யாணத்திலும் பிள்ளைகளின் உணர்வை மதிக்க கூடிய பெற்றோராக எல்லோரும் இருக்க வேண்டும்! ஆனால் அப்படி எல்லோராலும் இருக்க முடியாது! ஒவ்வொரு தாய் தந்தைக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் நல்ல தாய் தந்தையாக இருக்க நாம் முயற்சிக்க வேண்டும்… என்று ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார் டி ராஜேந்தர்!

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என்று கேள்வி கேட்டார். இறைவன் அருளால் விரைவில் நடக்கும்; வெளிப்படையாக சொன்னால் இதுதான் எனக்கு மனத்தாங்கல் ஆக இருக்கிறது! உங்கள் மீது எனக்கு வருத்தம்  இல்லை இந்த கேள்வியை நீங்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் என்னை வைத்திருக்கிறானே! விதி என்னை வைத்திருக்கிறதே என்ற வருத்தம்! ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும் விதியின் மீது மட்டும் தான்!simbu - 2026

கேள்வி கேட்பது உங்கள் கடமை; பதில் சொல்வது என் கடமை! ஆனால் பதில் சொல்ல முடியாமல் போவது என்பது என்னுடைய சூழ்நிலை!.. என்று பதிலளித்தார் டி ராஜேந்தர்!

டி ராஜேந்தரின் இந்த மனத்தாங்கலுக்கு பதிலாக சமூக வலைதளங்களில் சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பத்து பெண் அமைவாள்! அதனால்தான் கிறிஸ்தவ பெண்ணான நயன்தாராவுடன் அவருக்கு செட் ஆகாமல் போய்விட்டது! இன்னும் என்னவெல்லாமோ அவர் முயற்சி செய்தும் அதெல்லாம் நடக்காமல் போய்விட்டது! அதுதான் விதி! என்று சிலர் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்!

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img