அரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது! சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்!

அரசு செலவில் சிலை வைத்தால் அதற்கு உயிர் இருக்காது. அது பொதுமக்கள் வரிப்பணம். மக்களின் பணத்தில் சிலை வைத்தால் சிலைக்கு உயிர் இருக்காது. ஆனால், சொந்த செலவில் சிலை வைத்தால் அது அபிமானம். அபிமானத்தில் வைக்கும் சிலைக்கு உயிர் இருக்கும். இதுதான் பகுத்தறிவு!

இப்படிப் பட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றனர். அதற்குக் காரணம், திமுக.,வின் சிலை அரசியல்! பட்டேல் சிலைக்கு திமுக., விமர்சனம் செய்ய, கருணாநிதி சிலைக்கு பாஜக., விமர்சனம் செய்ய, சிலை அரசியல் வாக்குவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நிரம்பிக் கிடக்கிறது!

இன்று திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. கருணாநிதி உருவச் சிலையை இன்று திறந்து வைக்கிறார் காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியா காந்தி

இந்த நிகழ்ச்சியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் இன்று திறக்கப்படவுள்ளன.

இதன் பின்னர், ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.

ராகுல், சோனியாஆகியோர் மாலை 3.30 மணி அளவில் தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகின்றனர்.

இந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்கிறார். கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

இதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...