என்ன..?! திமுக., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டதா?!

ஆனால் இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரிந்தவர்கள் இதில் உள்ள பொய்ச் செய்தியை அறிந்து கொண்டு விலக்கிவிடுகிறார்கள்; அதேநேரம் அதிர்ச்சியான செய்தியாக பார்த்து திடீரென என்று அதிர்ச்சி அடைபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து வருகிறார்கள்!

மீம் கிரியேட்டர்கள் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார்கள். முன்னதாக பிரபலமான ஊடகம்,  பத்திரிகை இவற்றின் சமூக வலைதள பக்கம் அல்லது அவை வெளியிடும் செய்திகளை போன்ற டெம்பிளேட் முகப்பில் தாங்கள் சொல்ல விரும்பும் பொய்ச் செய்திகளை போட்டு, அந்த ஊடகம் வெளியிட்டது போன்ற மாயத்தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வந்தார்கள்,.

அதிலிருந்து ஒரு படி முன்னேறி இப்போது கட்சியின் லெட்டர் பேடில் தங்கள் விரும்பும் செய்தியை டைப் செய்து கட்சியே வெளியிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அப்படித்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ். அழகிரி வெளியிட்டது போன்ற ஒரு செய்தி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்த நிலையில், தமிழகத்தில் அதற்கான அரசியல் மாற்றங்களும் தென்பட தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியிலும் பங்கெடுக்கலாம் என்ற தகவலும் அண்மைக்காலமாக பரவி வருகிறது. மாநிலத்திலும் மத்தியிலும் தங்களது பங்கு இருக்க வேண்டும் என்று திமுக துடிப்புடன் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் சந்திரசேகர ராவ் சந்திரபாபு நாயுடு இவர்களோடு மட்டும் மு க ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கவில்லை; ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார்! அடுத்து நாயுடு உடனும் சந்திரசேகர் ராவுடனும் பேசிக்கொண்டிருந்தார்…

அதுமட்டுமல்ல பாஜகவுடனும் ஸ்டாலின் பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் கூறினார். அவரது பேச்சு பலத்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழிசை கூறியதன் பின்னணியில் ஸ்டாலின் மத்திய அரசில் அடுத்து மோடியுடன் கைகோர்க்க தொடங்கி விட்டாரோ அல்லது விரும்புகிறாரோ என்ற எண்ணத்தை அரசியல் மட்டத்தில் பலரும் பகிர்ந்து வந்தனர்

இந்நிலையில் மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரை வைத்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான அழைப்பு வந்ததாக ஸ்டாலின் நான்கு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்!

ஆனால் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிய வந்த சூழலில் மே 23-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு திமுக செல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது! இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ஸ்டாலின் மே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் என்று உங்களுக்கு யார் சொன்னது?! நீங்களாக செய்தியை போட்டுக்கொண்டு நீங்களாக ஒரு கேள்வி எழுப்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்! இதனால் கேள்வி கேட்ட நிரூபர் ஆச்சரியமடைந்தார்; அதிர்ச்சி அடைந்தார்!

இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகக் கூடும் என்று பரபரப்பான செய்திகள் வலைத்தளங்களில் பகிரப்பட்டன! அதேநேரம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசும்போது, மே 23-ஆம் தேதி கூட்டம் நடைபெறும்! அனைவரும் வருகிறார்கள்! ஸ்டாலின் எங்களது முக்கியமான கூட்டாளி அவர் அவசியம் வருவார் என்று கூறினார்!

அழகிரி அப்படி கூறியிருக்கும் போது ஸ்டாலின் வேறுவிதமாக கூறியதால் செய்தியாளர்களுக்கு பயங்கர குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது! இது நேற்று செய்தியாக வெளியான நிலையில் இன்று அதையே முக்கியமான விஷயமாக பிடித்துக்கொண்டு மீம்ஸ் கிரியேட்டகள், ஒரு மீம்ஸ்  தயார் படுத்தி இருக்கிறார்கள்

இந்த மீம்ஸில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி லெட்டர்பேடில் கே.எஸ்.அழகிரி 21 மே 2019 இன்றைய தினத்தில் வெளியிடுவது போன்ற அறிக்கையினை டைப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்!

அதில்… தமிழக காங்கிரஸ் கட்சியினரின் கவனத்துக்கு..! வரும் மே 23ஆம் தேதிக்கு பின் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் திருமதி சோனியா காந்தியுடன் நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது

விரைவில் காங்கிரஸ் தலைமை இதன் முழு விவரத்தையும் வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்பட அனைத்து தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் தெரிவிக்கப்படும்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கூட்டணி அமைக்க முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் உடனும் இணைந்து முயற்சி செய்து வருவதால் இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம் … என இதன் மூலம் பத்திரிகையாளர்களுக்கும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

இப்படிக்கு கே எஸ் அழகிரி என்று… தெரிவித்து, அழகிரியின் லெட்டர்பேடில் கடிதம் எழுதி எது போல அனுப்பி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

இது சமூக வலைதளங்களில் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பரவலாக பகிரப்படுகிறது!

ஆனால் இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரிந்தவர்கள் இதில் உள்ள பொய்ச் செய்தியை அறிந்து கொண்டு விலக்கிவிடுகிறார்கள்; அதேநேரம் அதிர்ச்சியான செய்தியாக பார்த்து திடீரென என்று அதிர்ச்சி அடைபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து வருகிறார்கள்!

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...