
அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அய்யப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதியினர் இவர்களுக்கு கிஷோர் (3)வயது என்ற மகன் உள்ளான்.
கார்த்திகேயன் மனைவி புவனேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்துக்கும் என்பவருக்கும் தகாத உறவு இந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்த கணவா் கார்த்திகேயன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் கணவன் கார்த்திக்கேயனை விட்டு பிரிந்த புவனேஸ்வரி, தனது மகன் கிஷோர் மற்றும் கள்ளக்காதலன் சோமசுந்தரத்துடன் அம்பத்தூர் மேனாம்பேடு வ.உ.சி நகரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர்.
நேற்று முன்தினம் சிறுவன் கிஷோர் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்துவிட்டதாக பெருந்துறையில் உள்ள மாமியாருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் மகன் கிஷோர் உடலை இறுதிச்சடங்குகள் செய்வதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு புவனேஸ்வரி கொண்டு சென்றார். சந்தேகம் அடைந்த அவரது அக்காள் இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது சிறுவன் கிஷோர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அவனது தலையில் காயம் இருந்தது.
இதுகுறுத்து பட்டுக்கோட்டை போலீசார் அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் பட்டுக்கோட்டை சென்று சிறுவன் கிஷோரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சென்னை கொண்டு வந்தனர். தற்போது கிஷோர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தலையில் காயம் இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக புவனேஸ்வரி, அவரது கள்ளக்காதலன் சோமசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக புவனேஸ்வரின் மாமியார் சுதா அம்பத்தூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் பேரன் கிஷோர் சாவில் மர்மம் உள்ளது. அவனை புவனேஸ்வரியும் அவளது காதலன் சோமசுந்தரமும் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புவனேஸ்வரியும், சோமசுந்தரமும் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் மேனாம்பேடு பகுதிக்கு குடிவந்துள்ளனர். அப்போது முதலே சிறுவன் கிஷோரை சோமசுந்தரம் அடிக்கடி தாக்கியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கவனித்துள்ளனர்.
எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


