தந்தையின் கவனக்குறைவால் உயிரிழந்த சிறுவன்…!

Published:

car - 2026

தந்தையின் கவனக்குறைவால் காருக்குள் வைத்து பூட்டப்பட்ட 8 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அதிகாரிகள் குடியிருக்கும் ஸ்கைஇந்தியா பகுதியை சேர்ந்த சிறுவன் வினோத். இவருடைய தந்தை லெப்டினன்ட் கமாண்டரிடம் பணியாற்றி வருகிறார்.

கடந்த திங்களன்று, அலுவலக காரில் வீட்டுக்கு வந்தவர் காரை சுத்தம் செய்துள்ளார். அப்போது தன்னுடைய மகன் வினோத் காருக்குள் இருப்பது தெரியாமல் கார் கதவுகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் மூச்சு திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கை இந்தியா பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடற்படையினரின் குடியிருப்புக்குள் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு அதிகாரமில்லை.

இதனால் கடற்படை அதிகாரிகளை சந்தித்து உரிய அனுமதி பெற காவலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img